ஆசிரியர், கடிதம்

திரு ஜெயமோகன்

கல்வி குறித்துத் தங்கள் கட்டுரையிலும் அதையொட்டிய கருத்துக்களிலும் மாணவர் பெற்றோர் பங்கு பற்றிப் பெரிதும் கவலைகொள்ளவில்லை(ஆசிரியர் நீங்கலாக).

ஆசிரியர்கள் தரம் பற்றி இரண்டாம் கருத்திற்கு இடம் இல்லை. ஆயினும் இப்பிரச்சினை அவர்களைக் கண்டிப்பதோடு நின்றுவிடுமா? பெற்றோர் மாணவர்களுக்குப் பங்கில்லையா? (நான் ஆசிரியனல்லன்) இறந்து போன மாணவன் கணிதப் பாடம் பயின்றதாக அறிகிறேன். அவனின் ஆர்வம்,தகுதி பற்றிச் செய்தி இல்லை. பெற்றோர் என்ன பங்களித்தனர். பள்ளிக்கு வெளியே (தனியார் பள்ளியே ஆனாலும்) மட்டுமே அறிவுத் தேடலுக்கும்,அனுமதிப் போட்டிக்கும் என் குழந்தைகளை ஆயத்தம் செய்கிறேன். பெற்றோர்களுக்கும் (குறிப்பாகத் தமிழகப் பெற்றோருக்கு) மாணவர்களுக்கும் இச்சீர்கேட்டில் பெரும் பங்கு உள்ளது. நீண்ட நாள் முன் வந்த செய்தி. இந்தச் சுட்டியையும் பார்த்துவையுங்கள்

நட்புடன்,
ராம்கி

http://www.telegraph.co.uk/education/educationnews/7876134/Teachers-told-to-get-tough-in-drive-for-better-discipline-in-schools.html

with regards,
ramki

அன்புள்ள ராம்கி

பனைமரத்துப்பட்டி சீனிவாசனைப்பொறுத்தவரை அவன் மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கிய, மிகுந்த இலட்சியவேகம் கொண்ட மாணவன்.  அவனுடைய கடிதத்தில் இருக்கும் அந்தத் தெளிவே அவன் சாதாரண மாணவன் அல்ல என்பதைக் காட்டுகிறது. ‘அந்த மக்குக்குப் புரியலைன்னா வாத்தியார் என்ன செய்வார்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.  அவனைப்போன்ற மாணவர் எந்த நல்ல ஆசிரியருக்கும் ஒரு பெரிய ஈர்ப்பையும் கனிவையும் அளிப்பவராகவே இருப்பார். இதெல்லாம் செய்திகளிலேயே வந்தவை.

பொதுவாகக் கீழ்நடுத்தர வர்க்கங்களில் பிள்ளைகளின் படிப்புக்குப் பெற்றோர் உதவ முடியாது. அவர்களின் கல்வித்தகுதி, உழைக்கும் சூழல் போன்றவை அதற்கு அனுமதிக்காது. உங்களைப்போன்றவர்களுடன் அவர்களை ஒப்பிட முடியாது

ஜெ

//ஒரு பிரச்சினை என்றால் டாக்டரை அடிக்கப் பாய்கிறார்கள் மக்கள். ஏன்?//

மருத்துவர்கள் மேல் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும், ஆழ்மன வக்கிரம் நிறைந்த எழுத்தாளர்களும், ஊடகங்களும் மருத்துவத்துறை குறித்துத் தொடர்ந்து தவறான தகவல்களை எழுதி மக்களை மூளைச் சலவை செய்துள்ளதால்தான் உண்மை என்னவென்று தெரியாத மக்கள் மருத்துவரை அடிக்கப் பாய்கிறார்கள்

இது இந்த வக்கிரம் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்களின் வெற்றி என்று ஏற்றுக்கொள்கிறேன்

இது தான் காரணம்

[email protected]

 

முந்தைய கட்டுரைஅறம்செய விரும்பு
அடுத்த கட்டுரைகொற்றவை,கடிதங்கள்