கோணங்கி வெளியிட்ட கல்குதிரை தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழில் நான் எழுதிய கட்டுரை, மன்னிக்காதே நெல்லி. 1992 வெளிவந்தது. தஸ்தயேவ்ஸ்கியின் அதிகம் பேசப்படாத நாவலான The Insulted and Humiliated லில் வரும் ஒரு கதாபாத்திரம் நெல்லி. அது அவருடைய தொடக்ககால நாவல். கச்சிதமான வடிவம் கொண்டது. அதில் அவர் பின்னாளில் உருவாக்கிய அத்தனை கதாபாத்திரங்களுக்கும் மூலவடிவம் எப்படி திகழ்ந்தது என இக்கட்டுரையில் பேசியிருக்கிறேன். கனலி தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழிலிருந்து.