இலங்கைப் பொருளியல் நெருக்கடி-கடிதம்

இலங்கையும் பின்தொடரும் நிழலின் குரலும்

அன்புள்ள ஜெ,

இலங்கைப் பொருளியல் நெருக்கடிகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். பல காரணங்களில் முக்கியமானது ஈஸ்டர் குண்டுவெடிப்பு. அது இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் மிகப்பெரிய அடியை விழச்செய்தது. சுற்றுலாத்துறையில் பணியாற்றுபவன், இலங்கையுடன் நெருக்கமானவன் என்ற முறையில் இது எவ்வளவுபெரிய இழப்பை உருவாக்கியது என்று எனக்கு நன்றாகவே தெரியும். இலங்கையில் மிக அதிகமானபேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில் சுற்றுலா. அதன் மேல் மரண அடி விழுந்தது.

இன்றைக்கு யோசிக்கும்போது அந்த குண்டுவெடிப்புக்கு மதவெறி காரணமல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது. மதவெறியனால்தான் அது செய்யப்பட்டது. ஆனால் அவன் பயன்படுத்தப்பட்டானோ என்ற சந்தேகம் வருகிறது. பெரிய பொருளியல் திட்டங்கள் அந்த குண்டுவெடிப்புக்குப் பின்னால்  இருக்கலாம். இலங்கையை பொருளியல்ரீதியாக வீழ்த்தி அதை கைப்பற்றும் முயற்சி எடுக்கப்படலாம்.

நான் சொல்லவருவது எளிமையான சதிக்கோட்பாடு அல்ல. இந்தவகையான ஃபெனட்டிஸம்கள் ஆபத்தானவை. டைனமைட் போன்றவை. நாம் நம் வீட்டில் டைனமைட் வைத்திருப்பதுபோல. இவற்றை யார் வேண்டுமென்றாலும் கொளுத்திவிடலாம் என்றுதான்.

ஆனால் இங்கே பேசுபவர்கள் இந்த குண்டுவெடிப்பு உருவாக்கிய அழிவைப் பற்றி மட்டும் பேசுவதில்லை.

ஸ்ரீதர் சந்தோஷ்

***

அன்புள்ள ஸ்ரீதர்

அருஞ்சொல் இதழில் இக்கட்டுரையில் குண்டுவெடிப்பும் பேசப்படுகிறது. ஆனால் முதன்மையான குற்றச்சாட்டு ஐஎம்எஃப் மீதுதான். அதை புரிந்துகொள்ள முடிகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஐ.எம்.எஃப் அளித்த கடன்களின்போது ஏரிகளில் கருவைமுள் நடுவது (சமூகக்காடுகள்) போன்ற உருப்படாத திட்டங்களுக்கு பணம்செலவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம்.

ஜெ

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?
முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் மரபின்மைந்தன்
அடுத்த கட்டுரைலோத்தல், தமிழரின் கடற்பயணம் – கடிதம்