Ocean’s nearby

அமெரிக்க நண்பர் ஜெகதீஷ்குமார் மொழியாக்கத்தில் என்னுடைய கதைகள் தொடர்ச்சியாக ஆங்கில இலக்கிய இதழ்களில் வெளியாகின்றன. சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இலக்கிய இதழ்களில் இக்கதைகள் தொடர்ச்சியாக வெளியாவது ஒன்றையே உணர்த்துகிறது, தமிழ்ச்சிறுகதைகளின் பொதுவான தரம் என்பதே சர்வதேச அளவில் மதிக்கப்படுவதுதான். ஆங்கில இலக்கியமொழியில் தேர்ச்சி கொண்ட நல்ல மொழியாக்கங்களில் நம் கதைகள் மிக எளிதாக உலக வாசகர்களைச் சென்றடைய முடியும்.

லின்கன், யுகேயிலிருந்து வெளிவரும் Impspried இலக்கிய இதழில் என்னுடைய அருகே கடல் என்னும் கதையின் மொழியாக்கம் Ocean’s Nearby என்ற தலைப்பில் அதன் இணையப் பதிப்பில் தற்போது வெளிவந்துள்ளது. இணைய இதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறையும், அச்சு இதழாக ஆண்டுக்கு மூன்று முறையும் வெளியிடப்படும் இவ்விதழின் அடுத்த அச்சுப்பதிப்பிலும் (மே இறுதியில்)  இக்கதை இடம் பெறும்

Jegadeesh Kumar’s Transaltion of Jeyamohan’s work

முந்தைய கட்டுரைராஜஸ்தானின் புதைநகர்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்