கதைக்குரல்கள்
அன்புள்ள ஜெ,
கதைக்குரல்கள் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை
தங்களின் “சோற்று கணக்கு” கதையை முதன் முதலில் Google Podcast ல் (https://bit.ly/3qsweXN) கேட்ட பிறகே இலக்கிய உலகுக்குள் வந்தேன். முன்பெல்லாம் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் வழி நெடுக கதை சொல்லிகளின் மூலம் பல நவீன இலக்கிய படைப்புகளை கேட்டதுண்டு. உண்மையில் எனக்கு இலக்கியத்தின் மேல் இருந்த மிரட்சியும் விலக்கமும் அகன்றது இவர்களினால் தான். சமீபத்திய புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் (மறுவாசிப்புகாகவும் பரிசளிப்பதற்காகவும்) ஏற்கனவே நான் கேட்டு ரசித்த கதைகளைத்தான்.
சிலர் வாசிப்பனுபவம் மேன்மையானது மற்றவை கீழ்மை எனவும் கருதுவது வருந்தத்தக்கது.
உங்களின் படைப்புகள் “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் போல்” அனைவருக்கும் எப்பொழுதும் பயனுற அமைய வேண்டுகிறேன்.
அன்புள்ள
பாலாஜி கணபதி
***
அன்பு வணக்கம் ஜெமோ சார்…
நான் மீடியா என்கிற எங்கள் இணைய ஊடகத்தளத்தில் உங்கள் கதையான ‘பாடலிபுத்திரம்’ ஒலிவடிவமாக ஆக்கியிருக்கிறோம்.
உங்களிடம் உத்தரவு பெற்றபிறகு ஆகச் சிறந்த தங்களின் கதைகளை ஒலிவடிவமாக பிரியப்படுகிறோம்.
என்றும் தோழமையுடன்
நான் மீடியா