பரிந்துரைகள்

 

ஜெயமோகன் சார்,

காலை வணக்கம்

நான் அடிக்கடி புது புத்தகங்கள் வாங்குவதில்லை இந்த புத்தகம் மிகவும் நன்றாக இருந்தது. உங்களுடைய அடுத்த புத்தகம் நான் எதை வாங்கலாம்

பரிந்துரைத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்.

பிரியமுடன்

பிரசாத்

***

அன்புள்ள பிரசாத்,

நீங்கள் வாசிக்கத் தொடங்குபவர் என்றால் அண்மையில் வெளிவந்தவற்றில் குமரித்துறைவி நாவலை வாங்கலாம் சிறிய நாவல். சிக்கல்கள் இல்லாத கதையோட்டம் கொண்டது.

அதே காலகட்டத்தில் எழுதிய சிறுகதை தொகுதிகளான ‘ஆயிரம் ஊற்றுகள்’ ‘பத்துலட்சம் காலடிகள்’ ‘தங்கப்புத்தகம்’ ‘ஆனையில்லா’ ஆகியவையும் வெளிவந்துள்ளன. கதைச் சுவாரசியத்துக்காகவேகூட அவற்றை வாசிக்க முடியும்.

முன்பு வந்த நூல்களில் வாசிக்கத் தொடங்கும் ஒருவர் இரவு, கன்யாகுமரி போன்றவற்றை வாசிக்கலாம்.

ஜெ

மின்னஞ்சல் : i[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைகுமரித்துறைவியின் சொற்கள்
அடுத்த கட்டுரைசிக்கவீர ராஜேந்திரன் – மஞ்சுநாத்