அது அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். மாபெரும் நுகர்வு கலாச்சாரத்தில் அமெரிக்கா அடியெடுத்து வைத்ததும் அப்போதுதான். ஹெடோனிசம் ஹிப்பிகளின் தாரக மந்திரம். எல்.எஸ்.டி , கோகெய்ன் போன்ற போதை வஸ்துக்களின் பெருக்கம், ராக் இசை போன்ற பல்வேறு இசைக்குழுக்களின் பிடியில் அமெரிக்க மக்கள் இருந்த காலம். கூடவே அப்போது முளைவிட்ட தனிமனித சுதந்திரம், இருத்தல் பற்றிய கேள்விகள் எல்லாமாக சேர்ந்து அமெரிக்காவை ஆட்டிப் படைத்தன