பீர் புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம்

//IT கம்பெனி ஊழியர்கள் குடித்து விட்டு பாட்டில்உடைத்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் மேனேஜர் முதல் அனைவரும் அதை ரசித்து ஆரவாரம் செய்து புகைப்படங்கள்எடுத்தனர்.அவர்கள் FaceBook  இல் அந்த புகைப்படங்கள்இருக்கலாம்.//

முராத்தியின் பீர்புட்டிகள்

IT மற்றும் BPO துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள்  உலகில் இருக்கும் அத்தனை சீர்கேடுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தொடங்கி ஆண்டுகள் பலவாகின்றன. ஒரு பிரிவினர் செய்யும் செயல்களை இது போலப் பொதுமைப்படுத்துதலே அதற்குக் காரணம்.

நானாக இங்கே பதில் எழுத ஆயிரம் இருக்கிறது. எனினும் உணர்ச்சி வேகத்தில் ஏதேனும் தவறாய் எழுதிவிடுவேன் எனும் பயத்தில் நாஞ்சில் நாடன் அவர்கள் “தீதும் நன்றும்” தொடர் வாயிலாகச் சொன்ன நான்கு பத்திகளை இங்கே உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

“எப்போதும் பொதுமைப்படுத்துதல் நன்றன்று. மூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண் கிறார்கள். எந்த வீர தீர சினிமாக்காரனும்எண்ணிப் பாராத விதத்தில் நேர்மையாக வருமான வரி கட்டு கிறார்கள். அவர்கள் எவருக்கும் முதலமைச்சர் கனவு இல்லை, எனினும் 16 மணி நேரம் தினமும் உழைக் கிறர்கள். மனதில்கொள்ளுங்கள் ஓவர்டைம் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது. காருண்ய அடிப்படையில் உறவினருக்கு வேலைவாய்ப்பு கிடையாது.

கிடைக்கும் விடுமுறைகளில் காலை உணவு, மதிய உணவு மறந்து நெடுந்தூக்கம் போடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மை புகை பிடிப்பது இல்லை. டயட் பற்றி அக்கறை கிடையாது, ஏனெனில் உணவே டயட்தான்.

சிலர் படிப்பார்களாக இருக்கும், சிலர் பாட்டு கேட்பாளர்களாக இருக்கும், சிலர் சினிமா பார்ப்பார்களாக இருக்கும். அவர்களுக்குள் சாதி இல்லை, சமயம் இல்லை, அரசியல் இல்லை, ஏற்றத்தாழ்வுகள் இல்லை, நம்மைப் போன்று இறுமாப்பும் இல்லை.

என்றாலும், சமூகத்தின் ஒட்டுமொத்தமான அதிருப்தியைக் குறுகிய காலத்தில் சம்பாதித்துள்ள துர்ப்பாக்கியசாலிகள் இவர்கள். ஏனெனில், அவர்களது அதிநவீன நடை, உடை, தாராளமான செலவினம், எதையும் எதிர்கொள்ளும்போக்கு எல்லாம் சமூகத்தை எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.”

 

அன்புடன்

கிரி ராமசுப்ரமணியன்

சென்னை.

 

அன்புள்ள கிரி,

ஆக இனிமேல் இப்படி ஒரு விதி செய்வோம். பாவம் பொட்டிதட்டுபவர்கள். இனிமேல் அவர்கள் பீர் புட்டியை உடைப்பதை ஒருவர் நேரில் பார்த்தாலும் அதை எழுதக்கூடாது. அவர்கள் மனசு புண்படும்-  இல்லையா?

ஜெ

முந்தைய கட்டுரையானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்
அடுத்த கட்டுரைசமச்சீர் கல்வி-கடிதம்