அன்புள்ள ஜெ,
நான் கடவுள் பற்றிய இணைப்புகள் சிலவற்றை மீண்டும் அனுப்பியிருக்கிறேன். பொதுவாக ஆரம்பத்தில் வந்த குழப்பமான, எதிர்மறையான கருத்துக்கள் விலகி இப்போது படத்தை எந்த சொந்த எண்ணமும் இலலமல் பார்க்கும் கருத்துக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.
ஒரு கேள்வி. நடுவே ஒரு கிறித்தவ மத நிறுவனம் காட்டப்படுகிறதே அது ஏன்? அந்த இடமே துண்டாக இருக்கிறதே?
”இந்த வணிகப்படத்துக்குள் ஒரு முக்கியமான, நுட்பமான தளங்கள் கொண்ட, வன்மையான ஒரு படம் இருக்கிறது. மீன் வயிற்றுக்குள் இன்னொரு மீன் இருப்பது போல. அல்லது சிப்புக்குள் முத்து இருப்பது போல.அதன் செவ்வி தலைப்படுவாரும் சிலர் இருப்பார்கள்.”
http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2009/NaanKadavul.asp
http://umashakthi.blogspot.com/2009/02/blog-post.html
http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-09-02/images/rajini-letter-10-02-09.jpg
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=930
சண்முகம் குமரவேல்
[தமிழாக்கம்]
அன்புள்ள சண்முகம்,
நன்றி. இந்த இணைப்புகள் வாசகர்களுக்கு உதவியாக இருக்கலாம். நீங்கள் சொன்னதுபோல ஆரம்பத்தில் எதிர்பார்ப்புகள் சார்ந்து இருந்த சிக்கல்களை தாண்டி இப்போது வருபவர்களால் படம் பரவலாக வரவேற்கபப்டுகிறது. தொடர்ச்சியாக கூட்டம் நீடிப்பதாகச் சொல்கிறார்கள். மிக அதிகமான பிரதிகள் [436] போடப்பட்டிருப்பதனால் படம் இதற்குள்ளாகவே ‘தாண்டி’ விட்டது என்றார்கள். இதைப்போன்ற ஒரு எதிர்மறையான, மகிழ்ச்சியடையச்செய்யும் எந்த அம்சமும் இல்லாத, படம் இந்த அளவுக்கு வரவேற்பு பெறுவதை தமிழில் நீடிக்கும் ஓர் ஆச்சரியமாகவே எண்ணுகிறேன்.
ஜெ