விஷ்ணுபுரம் பதிப்பகம்- கடிதம்

விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு
விஷ்ணுபுரம் பதிப்பகம் எவருடையது?

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பகம் அலுவலகம் ஒன்று கோவையில் திறப்பதைப் பற்றிய செய்தியை அறிந்தேன். எனக்கு அப்படி ஓர் அலுவலகம் பற்றிய கனவு இருந்தது. விஷ்ணுபுரம் அமைப்பு உருவாகி இப்போது பதிமூன்றாண்டு ஆகப்போகிறது. ஆனால் இன்றைக்கு வரைக்கும் ஒரு விலாசம் இல்லை. ஓர் இடம் இல்லை. அப்படி ஓர் இடம் வேண்டும் என்று தோன்றியது. அந்த பதிப்பகம் தனியார் இடமாக இருக்கலாம். ஆனால் அதில் ஒரு சிறுபகுதியாவது விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்கு உரியதாக இருக்கவேண்டும். ஒரு போர்டு அங்கே தொங்கவேண்டும். ஒரு ஆசைதான் இது

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பகம் அறிவிப்பை கண்டேன். நீங்கள் கோவைக்கு வந்து செல்லும்போது சென்றபிறகுதான் கோவையில் இருந்த செய்தியே தெரியவருகிறது. ஒருநாள் மாலை மட்டும் இங்கே தங்கி வாசகர்களைச் சந்திக்கலாம் என்று நான் நினைத்ததுண்டு. நீங்களே அதை எழுதியிருக்கிறீர்கள்.

விஷ்ணுபுரம் பதிப்பகம் வந்து உங்களைச் சந்திக்க ஆவலுடனிருக்கிறேன். அங்கே உங்களுடன் இயல்பான ஓர் உரையாடல் அமையும் என நினைக்கிறேன்

அஸ்வின்குமார்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

மின்னஞ்சல்: [email protected]

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைபெருங்கவிதைத் தொகுதிகள்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ஆர் வழக்கு – கடிதங்கள்