பேசாதவர்கள் – கடிதம்

புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள்

பேசாதவர்கள் சிறுகதையை வாசித்தேன் சொல் அற்றவர்களாக ஒடுக்கப்பட்ட சமூகம் முச்சந்தியில் நின்று காக்கைகளும் கழுகுகளும் கொத்த இறந்தவர்களின் குரலாக, இன்றும் இருட்டு அறையில் பூட்டி கிடைக்கின்ற அவர்களின் குரலாக இக்கதையை பார்க்கிறேன். நிஜமான தூக்குக்கு செய்யும் அதே நடைமுறைகளை அந்த டம்மிக்கும் செய்கிறார்கள் பிறகு அதே நடைமுறையை குற்றவாளிகளாக கருதப்படும் நபருக்கு செய்கிறார். குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் போது அந்த டம்மிக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர்களின் குரலாக ஒரு மலை தெய்வம் இறங்கி வர வேண்டியிருக்கிறது, நின்று எரிய வேண்டியிருக்கிறது.

ஏழுமலை

***

அன்புள்ள ஜெ

பேசாதவர்கள் சிறுகதையை வாசித்தேன். பேசாதவர்களின் அதே அலைவரிசையில் வரும் சில கதைகள் உங்கள் புனைவுக்களியாட்டில் உள்ளன. கழு முதலிய கதைகள். அவையனைத்துமே தலித் வாழ்க்கை, அவர்கள்மேல் செலுத்தப்படும் ஒடுக்குமுறை பற்றிய கதைகள். அவற்றை ஒரு தொகுப்பாக கொண்டுவரலாம் என நினைக்கிறேன். ஆலோசியுங்கள். தலித் ஒடுக்குமுறையை ஒற்றைப்படையான சீற்றமாகச் சொல்லாமல் அதிலுள்ள மானுட அம்சத்தைச் சொல்லும் கதைகள். அதேசமயம் கலையழகுடன் உள்ளடுக்குகளுடன் வரலாற்றுணர்வுடன் பேசும் கதைகள் இவை

எழுலரசு ஆறுமுகம்

முந்தைய கட்டுரைஆயிரம் காந்திகள் – சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஅறம் வழியாக நுழைவது…