இரா.முருகனின் ’மிளகு’

இந்தப் புத்தகக் கண்காட்சியில் இலக்கிய வாசகர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய நூல்களில் ஒன்றாக இரா.முருகன் எழுதிய ’மிளகு’ இடம்பெறும். இந்நாவலின் பகுதிகளை இணையத்தில்  வாசித்தேன். தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களில் ஒன்று என்று இந்நாவலைச் சொல்வேன்.

வரலாற்றுக்கு ஊடாக சாமானியர்களை ஊடாடவிட்டு விளையாட்டும் விமர்சனமுமாக கதைசொல்வது இரா.முருகனின் பாணி. அரசூர் வம்சம் போன்ற அவருடைய பெருநாவல்களில் உருவான அந்தப்பாணி முழுமையை அடைந்திருக்கும் நாவல் இது. இதிலுள்ள வடிவ விளையாட்டு, முன்னும்பின்னுமாகச் செல்லும் கதை ஆகியவை சலிப்பூட்டும் மூளைச்சோதனைகள் அல்ல. எல்லாப் பக்கங்களிலும் வாசகன் புன்னகைக்கவும் கற்பனையில் நீள்தொலைவு செல்லவும் வாய்ப்பளிக்கும் புனைவுத்தருணங்கள் உள்ளன. வரலாற்றை ஒட்டுமொத்தமாக ஒரு அபத்தப்பின்னலாக ஆக்கிக் காட்டும் இந்நாவல் வரலாறுமேல் அது என்னவென்றே தெரியாமல் ஒரு வழிபாட்டுணர்வு கொண்டுள்ள தமிழ் உள்ளத்திற்கு அவசியமான சில கீறல்களை அளிக்கிறது.

மிளகு வாங்க 

முந்தைய கட்டுரைஜேன் ஆஸ்டன் -பி.கே.பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைதந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும் —2