வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே,
உங்கள் ஆமை சிறுகதையை அண்மையில் படித்தேன். மிக அருமையான கதை. பற்பல ஆண்டுகளுக்கு முன்,
என் உறவில் ஒரு வயதான மூதாட்டி, கேரளாவில் மேலாடை இல்லாத, போட முடியாத பெண்களைப்பற்றி கூறினார். அப்ப அவர் கூறுவதை மிக அலட்சியமான போக்குடன் கேட்டேன். மனதில் என்ன இவங்க இப்படி பேசுகிறார்களே, இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்திருப்பார்களா என்ற எண்ணம்தான் தோன்றியது. அப்பொழுது நான் மிக இளம்பெண்.
ஆதாம் ஏவாள் காலத்தில் ஆடை இல்லைதான். ஒரு இரு தலைமுறைகளுக்கு முன்பு இப்படியா என்ற வலுவான எண்ணம். ஆனால் கொரம்பையை பற்றி அவர் சொல்லவில்லை. உங்கள் ஆமை சிறுகதையை படித்தவுடன் அவரின் ஞாபகம் வந்து, மறைந்த அந்த மூதாட்டியுடன் நிறைய பேசவில்லையே என்று வருத்தப்பட்டேன். கேரள நாட்டில், இன்றும் இந்த மேல் ஜாதி கீழ் ஜாதி பாகுபாடு இருந்துக்கொண்டுதானே உள்ளது. மெத்த படிப்போ வியப்பூட்டும் பொருளாதார மேம்படோ இவ்வழக்கத்தை மாற்றவில்லையே!!
அது ஒருபுறமிருக்க,உங்கள் எழுத்துக்களுக்கு வருவோமே. பிரமிப்பாக உள்ளது. நிறைய எழுதுகிறீர்கள்.எல்லா விடயங்களையும் தொட்டு எழுதுகிறீர்கள். எப்படி சாத்தியமாகிறது???
நன்றி.
வணக்கம்.
சாந்தா சுப்ரமணியம்
அன்புள்ள ஜெ
உங்கள் புனைவுக் களியாட்டு கதைகளில் இரண்டு கதைகள் என்னை மிகவும் பாதித்தன. ஒன்று ஆமை. இன்னொன்று விசை. இரண்டு கதைகளிலும் வருபவர்கள் ஒரே வகையான பெண்கள். இந்த உலகத்தால் கைவிடப்பட்டவர்கள். இருப்புக்காக போராடுபவர்கள். ஒருத்தி தன்னைச் சுருகிக்கொள்கிறாள். இன்னொருத்தி இறுக்கி உறுதியாக்கிக் கொள்கிறாள். இன்றைக்கும் இரண்டு வகையான பெண்களையும் நம்மால் பார்க்கமுடிகிறது
ராகவேந்திரன்
https://www.vishnupurampublications.com/