இம்மாத கவிதைகள் இணைய இதழ், கவிஞர் அபியின் சிறப்பிதழாக வெளிவருகிறது. அபி அவர்கள் இம்மாதம் 22 ஆம் தேதியோடு தனது எண்பது வயதை நிறைவு செய்கிறார். தமிழின் பெருங் கவிஞரான அபியின் எண்பது அகவை நிறைவை மரியாதை செய்யும் வகையில் இம்மாத இதழ் அவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இவ்விதழில் எழுத்தாளர் பாவண்ணன், ஈரோடு கிருஷ்ணன், நிக்கிதா, விக்னேஷ் ஹரிஹரன், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் தலா இரண்டு கவிதைகளுக்கான குறிப்புகளை எழுதியுள்ளனர். இந்த மாத இதழை அவரது பத்து கவிதைகள் அடங்கிய சிறப்பிதழாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
பி.கு: இனி கவிதைகள் இணைய இதழ் http://www.kavithaigal.in/ என்ற வலைதளப் பக்கத்தில் வெளிவரும்.
நன்றி,
நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.