அம்பைக்குச் சாகித்ய அக்காதமி விருது

அம்பை [சி.எஸ்.லட்சுமி]

தமிழில் பெண்ணிய நோக்கிலான இலக்கியப் படைப்புகளின் தொடக்கமாக அமைந்தவை அம்பையின் கதைகள். அம்மா ஒரு கொலைசெய்தாள், கறுப்புக்குதிரைச் சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற முக்கியமான சிறுகதைகளின் ஆசிரியர். முதல்தலைமுறைப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுநூல் [The Face behind the mask : Women in Tamil literature, Stosius Inc/Advent Books Division] முக்கியமான இலக்கிய வரலாறு. ஸ்பாரோ என்னும் அமைப்பினூடாக சமூக, இலக்கியப் பணிகள் ஆற்றிவருகிறார்.சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்னும் சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது

சாகித்ய அக்காதமி விருதுபெறும் அம்பைக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா-2
அடுத்த கட்டுரைஜானகியின் அதிகாலை