எழுதும் முறை எது?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீண்ட காலமாக உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும் என்ற ஆசை.

நீங்கள் மிகவும் வேலைப்பளு உள்ளவர். நிறைய படிக்கிறீர்கள். உங்களுக்கு வரும் கடிதங்களை படித்துப் பார்த்து பதில் எழுதும் போது நீங்கள் கைப்பட எழுதுவீர்களா ? இல்லை. மென்பொருள் ஏதும் கொண்டு (app) ஆடியோ மூலம் சொல்வதை மொழிமாற்றம் செய்து கொள்வீர்களா?

 

நன்றி,

சத்ய நாராயணன்

ஆஸ்டின் டெக்சாஸ்

 

அன்புள்ள சத்யா,

நான் கையால் எழுதுவதில்லை. தட்டச்சு செய்கிறேன். என்எச்எம் மென்ம்பொருள் பயன்படுத்தி, ஆங்கில எழுத்துக்கள் வழியாக தமிழை எழுதுகிறேன்.

சொல்லி எழுதவைப்பதில்லை. அந்த மென்பொருளுக்கு நானும் எனக்கு அதுவும் பழகவில்லை. அது மிக உதவியானது என நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்குச் சரிவரவில்லை.

எல்லா கடிதங்களும் தட்டச்சு செய்யப்படுபவையே

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2021- கதிர் முருகன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா -1