விஷ்ணுபுரம் விருது, பழைய புகைப்படங்கள்

விஷ்ணுபுரம் விருது 2021க்க்கான புதிய புகைப்படங்களுடன் நினைவில் இணைந்து கொண்டவை  நண்பர் ரா.செந்தில்குமார் எடுத்தவை. அவருடைய தனிப்பட்ட சேமிப்பில் இருந்தவை. 2013 மற்றும் 2014.

பழைய புகைப்படங்கள், குறிப்பாகப் பயணப்படங்கள், அப்போது tinypic.com இணையதளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டு பின்னர் என் தளத்தில் தொடுப்பு அளிக்கப்பட்டன. பின்னர் வந்த படங்களெல்லாம் கூகுள் பிளஸ் இணையப்பக்கத்தில் வலையேறறம் செய்யப்பட்டு இங்கே இணைப்பளிக்கப்பட்டன. ஏனென்றால் என் தளத்தின் இடவசதி மிகக்குறைவு. படங்கள் மிகுதியானால் விரைவும் குறைகிறது. [இப்போதுகூட படங்கள் வேறொரு பிளாக்ஸ்பாட் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டு இணைப்புதான் அளிக்கப்படுகின்றன]

ஆனால் அந்த இரு தளங்களுமே புகைப்படங்களை அழித்துவிட்டன. ஆகவே பலநூறு அரிய படங்கள் அழிந்துவிட்டன. பயணக்கட்டுரைகளில் படங்கள் அனேகமாக இன்றில்லை. நண்பர்களின் சேமிப்பில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

செந்தில்குமாரின் இப்படத்தொகுதி சுவாரசியமாக உள்ளது. நினைவுகளை பெருகச் செய்கிறது. வெண்முரசு எழுதத் தொடங்குவதற்கு முந்தைய காலம். எனக்கு தலையெல்லாம் முடி இருக்கிறது. நண்பர்கள் எல்லாருமே இளமையாக இருக்கிறார்கள்.

விஷ்ணுபுரம் விருது 2013 புகைப்படங்கள்- ரா செந்தில்குமார்
விஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள் -ரா.செந்தில்குமார்

 

முந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருதளிப்பு விழா, இன்றைய நிரல்
அடுத்த கட்டுரை அருணா ராய் வருக! – பாலசுப்ரமணியம் முத்துசாமி