A Fine Thread

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நலம்.  பள்ளிப் பாடப்புத்தகங்களில் கட்டுரைவடிவில் இருக்கும் விபரங்கள்தான் காந்தியைப்பற்றிய பொதுவான அறிவு. அவர்களுக்கு, காலப்போக்கில், காந்தி என்றால், சுதந்திரம், அஹிம்சை, உப்புச்சத்யாகிரஹம் என்று வெறும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடுகிறது. வரலாற்றை புனைவு போல சொல்லக்கேட்டு, காந்தியைப் பற்றி ஆறாம்/ஏழாம் வகுப்பிலேயே ஆழமான விஷயங்களை கற்றுக்கொண்ட அதிர்ஷடசாலி நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.   என்னதான், தட்டினால்,தேடியது கிடைக்கிறது கூகுளில் என்றாலும், ஆள்மனதில் நின்று சிந்தனையைத் தூண்டி விடுவது புனைவுகளும், அதைச் சுவைபடச் சொல்லும் புனைவு ஆசிரியர்களும்தான்.

 

‘அய்யன்காளி’ என்று தேடினால், எனக்கு விக்கிப்பீடியாவில் விஷயம் வரும். ஆனால், இருபது நாட்கள் கழித்து ஒருவர் அய்யன்காளி யார் என்று கேட்டால், என்னுடைய ‘contact’- இல்லையென்று அசடுவழியவேண்டிவரும். உங்கள் சிறுகதை ‘மெல்லிய நூலை வாசித்தவன், ‘அய்யன்காளி’-யை விக்கிப்பீடியாவில் தேடி வாசிக்கிறான் என்றால், அந்தக் கரிய , உருமாள் அணிந்த உருவத்தை மனதில் வைத்துக்கொண்டு வாசிக்கிறான். மெல்லிய நூலில் தடியை கீழே வைத்தவனின் ஆளுமையை அறிந்துகொள்ளவேண்டும் என்று ஆவலில் வாசிக்கிறான். இவனிடம், ‘அய்யன்காளி’ யார் என்று கேட்டால், காந்தியின் அஹிம்சா வழியை வாழ்வில் பின்பற்றிய உதாரண புருஷன் என்று ஒரு பெரிய பிரசங்கம் தருகிறான். சோகன்ராம் , பார்த்த , காந்திக்கும் அய்யன்காளிக்கும் நடந்த மௌன உரையாடலை, தானே பார்த்ததுபோல சொல்கிறான். சிண்டன் கேட்கும் கேள்விகளுக்கு, காந்தியின் பதில்களை சொல்லி ஆச்சரியப்படவைக்கிறான். இப்பொழுது கேள்வி கேட்டவனுக்கு அய்யன்காளியும் தெரிகிறது, காந்தியை பற்றிய புரிதலும் விரிவடைகிறது.

 

ஜெகதீஷ் குமார், ‘மெல்லிய நூல்’, சிறுகதையை, A fine thread என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததன் மூலம், காந்தி பற்றிய சரியான புரிதலை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பணிக்கு வைக்கவேண்டிய செங்கற்களில் ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.  

 

மெல்லிய நூல் ஆங்கில மொழியாக்கம் , A fine thread, Indian Periodical பத்திரிகையில் வந்துள்ளது. ஆகஸ்ட் மாத இதழில், குமிழிகள் கதை bubbles என்ற பெயரில் ஜெகதீஷ் குமாரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருந்தது என்பதை தாங்களும் வாசகர்களும் அறிவீர்கள்.

 

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள், ஆங்கிலமொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள நண்பர்களின் பெயரைச் சொல்லி பாராட்டிப் பேசும்பொழுது, ஜெகதீஷையும் குறிப்பிட்டு சொல்வார். ‘தேவி’ மொழியாக்கம் பற்றி எழுதிய கடிதத்தில், சகாவின் பெயரையும், ஜெகதீஷையும், குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்,  இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் மொழியாக்கங்களுக்கு அவர்களின் பங்கும் முக்கியம், இன்றியமையாதது என்பதை தெரிவித்துக்கொண்டார்.

 

 

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

A Fine Thread

 

 


முந்தைய மொழியாக்கங்கள்

 

முந்தைய கட்டுரை அருணா ராய் வருக! – பாலசுப்ரமணியம் முத்துசாமி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் நிகழ்வு, முதற்பதிவு