விஷ்ணுபுரம் விருது 2021ம் ஆண்டுக்கு கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று மாலை ஐந்தரை மணிக்கு கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் விழா நிகழ்கிறது. நேற்று முதல் ராஜஸ்தானி சங் அரங்கில் இலக்கியக் கருத்தரங்குகள் நிகழ்ந்து வருகின்றன. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் எங்கள் விருந்தினர்களாக வந்து கோவையில் தங்கியிருக்கிறார்கள்.
காலையில் சிறப்பு விருந்தினர்களுடனான வாசகர் சந்திப்புகள் நிகழ்கின்றன
காலை அமர்வு
காலை 930 -1030 வரை
இயக்குநர் வசந்த் சாய்
ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்
வசந்த், மாற்று சினிமா- கடிதங்கள்
காலை 1030 முதல் 1130 வரை
தெலுங்குக் கவிஞர் சின்னவீரபத்ருடு
ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்த் ராஜூ
தேநீர் இடைவேளை
1200 முதல் 1 மணி வரை
கவிஞர் விக்ரமாதித்யன்
ஒருங்கிணைப்பாளர் சுனீல் கிருஷ்ணன்
மதிய அரங்கு
200 முதல் 325 வரை
ஜெய்ராம் ரமேஷ்
ஒருங்கிணைப்பாளர் ராம் குமார்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி
ஜெய்ராம் ரமேஷ், இந்திரா காந்தி- கடிதங்கள்
ஆசியஜோதியின் வரலாறு – முன்னுரை
1879: ஆசியாவின் ஒளி, நூல் பகுதி
புத்தக வெளியீடு:
இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல் – கல்பனா ஜெயகாந்தின் கவிதைத் தொகுப்பு
மாலை ஐந்து முப்பது மணிக்கு விருதுவிழா ராஜஸ்தானி சங்க் அரங்கிலேயே நிகழ்கிறது. விழாவின் சிறப்புவிருந்தினர்கள்
ஜெய்ராம் ரமேஷ் [முன்னாள் மத்திய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், இலக்கிய ஆய்வாளர்] .
தெலுங்குக் கவிஞர் சின்ன வீரபத்ருடு,
திரை இயக்குநர் வசந்த் சாய்,
எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் ஜெயமோகன்
ஏற்புரை விக்ரமாதித்யன்.
நிகழ்ச்சிக்கு முன் கவிஞர் ஆனந்த்குமார் இயக்கிய விக்ரமாதியனைப்பற்றிய ஆவணப்படமான ‘வீடும் வீதிகளும்‘ திரையிடப்படும்.
கவிஞர் விக்ரமாதித்யனைப் பற்றிய விமர்சனங்களின் தொகுதியான ‘விக்ரமாதித்யன் – நாடோடியின் கால்த்தடம்’ நூல் மேடையில் வெளியிடப்படும்.
அனைவரும் வருக!