விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்
இன்று, 25-12-2021 அன்று விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் காலை 930 அளவில் தொடங்கவிருக்கிறது. கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது.
இன்று காலையில் இருந்தே இலக்கியச் சந்திப்புகள் தொடங்குகின்றன. இளம் படைப்பாளிகளும் மூத்த படைப்பாளிகளும் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் வாசகர்களுடன் உரையாடுவார்கள். வாசகர்கள் அவர்களின் புனைவிலக்கியத்தில் இருந்து வினாக்களை கேட்கலாம். இது முழுக்க முழுக்க இலக்கிய அரங்கு. ஆகவே எந்த வகையான அரசியல் விவாதமும் அனுமதிக்கப்படுவதில்லை.
நாம் எங்கே எதைப்பேசினாலும் சினிமாவுக்கும் வந்துவிடுவோம். ஆகவே சினிமாவை இழுத்துப் பேசுவதும் தவிர்க்கப்படவேண்டும். இரண்டு ஆளுமைகள் சினிமா சாந்தவர்கள். கோகுல் பிரசாத் சினிமா விமர்சகர். இயக்குநர் வசந்த் சாய் சினிமாத்துறையினர். ஆகவே அவர்கள் இருவரின் அரங்குகளிலும் சினிமா பற்றி, தீவிர சினிமா பற்றி மட்டும், பேசலாம்.
இக்கட்டுப்பாடுகள் ஏன்? அதைப்பற்றிய வினா ஒவ்வொரு ஆண்டும் எழுவதுண்டு. நம் சூழலில் இலக்கியத்துக்கான இடம் மிகமிகக் குறைவு. எந்த அரசு சார் அமைப்பும், கல்விசார் அமைப்பும் அந்த இடத்தை இலக்கியத்துக்கு உருவாக்கி அளிக்கவில்லை. அதற்காகவே அமைக்கப்பட்ட இடங்கள்கூட கையகப்படுத்தப்பட்டுள்ளன
ஆகவே மிகுந்த பொருட்செலவுடன் வாசகர்களே உருவாக்கிக் கொண்டிருக்கும் அமைப்பு இது. இந்த அரங்கில் வந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டணம் கட்டி வருபவர்கள்போலத்தான். அவர்கள் இதன்பொருட்டு பணம் செலவிட்டிருக்கிறார்கள். இலக்கியம் பற்றிப் பேசவே அவர்கள் தொலைவில் இருந்தெல்லாம்கூட வந்திருக்கிறார்கல்ள்
ஆகவே கட்டற்று செல்லும் விவாதமோ சொற்பொழிவோ இங்கே சாத்தியமல்ல. கூடுமானவரை வந்திருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக உரையாடல்கள் அமையவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதன்பொருட்டே இந்தக் கட்டுப்பாடுகள். எங்கும் என்றும் ஒலிக்கும் பேச்சுக்களை தவிர்த்து மிகமிக அரிதாக மட்டுமே நாம் பேசும் இலக்கியம் சாந்த விவாதங்கள் இங்கே நிகழவேண்டும்.
இந்த அரங்கில் பங்கெடுப்பவர்கள் முக்கியமான ஆளுமைகள். சோ.தர்மன், எம்.கோபாலகிருஷ்ணன், பா.திருச்செந்தாழை ஆகியோர் தமிழில் இடம் அமைந்த படைப்பாளிகள். சுஷீல்குமார், ஜா.தீபா, காளிப்பிரசாத் செந்தில் ஜெகன்னாதன் ஆகியோர் கவனிக்கப்படும் படைப்பாளிகள். கோகுல் பிரசாத் விவாதங்களை உருவாக்கும் இளம் விமர்சகர். அவர்கள் பேசுவதைக் கேட்க அரங்கு காத்திருக்கிறது.
நிகழ்வுகள் நிறைவாக நிகழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவருக்கும் நல்வரவு.
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
vikramadhityan wiki page
விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் கடிதங்கள்-15
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11
விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3