ஆசிரியருக்கு வணக்கம்,
கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெரும்பாலான இடங்களில் வெள்ள பெருக்கும் மழையால் சேதமும் . சிதம்பரம் கிள்ளை அருகே மானம்பாடி யில் 26 இருளர் குடும்பங்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வை மேம்படுத்த பூராசாமி என்பவர் தன்னை அர்பணித்து கொண்டார்.
அவர் மூலமாக எங்கள் கிளப் டென் அறக்கட்டளை சார்பாக சில உதவிகள் செய்யும் வாய்ப்பு கிட்டியது.
அந்த இருளர் மக்கள் வயிற்று பசிக்காக அங்குள்ள ஏரியில் தூண்டில் மூலம் மீன்பிடித்து விற்க முயன்றபோது அவர்களின் கை பட்ட மீனை யாரும் வாங்க வில்லை.இரு ஆண்டுகளுக்கு முன் கிளப்டென் நிர்வாகி தாமரை செல்வி அங்கு நேரில் சென்று அம்மக்களுக்கு மீன் பிடி வலைகள் வாங்கி கொடுத்தார்.
அதன் பின் அந்த குடும்பங்கள் கொஞ்சம் பசியின்றி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பெய்யும் பெருமழையில் தார்பாய் கூரையாகவும், சுற்று சுவராகவும் உள்ள சிறு குடிசைகளில் வெள்ளம் புகுந்தால் அமரவோ,படுக்கவோ முடியாமல் நீரில் ஈர உடைகளுடன் பிஞ்சு குழந்தைகள் உட்பட மூன்று நாட்கள் உணவில்லாமல் இருந்ததை கண்டு அவர்களின் பசியை போக்க உடனடியாக அந்த இருபத்தியாரு குடும்பங்களுக்கும் 500₹ மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கினோம்.
இரு ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு கொடுத்த மீன் பிடி வலைகள் சேதமடைந்து உபயோகபடுத்த முடியாமல் போயிற்று. நன்கொடைகளை பெற்று மூன்று கட்டங்களாக புதிதாய் 15 மீன் பிடி வலைகள் வாங்கி கொடுத்தோம்.
இதற்கு என்னை நன்கறிந்த நமது விஷ்ணுபுர நண்பர்களே பொருளுதவி செய்தனர்.
மேலும் அவர்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால் அரசு மூலம் வீடுகள் கட்டி கொடுக்க முடியும் என நண்பர் பூராசாமி சொல்கிறார்.
2 சென்ட் நிலம் 50000₹(ஐம்தாயிரம்) தில் கிடைக்கும். பூராசாமியும், கிளப் டென் அறக்கட்டளையும் அந்த இருளர் குடும்பங் களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க பெருமுயற்சி செய்து ஒரு வீடு கட்ட தேவைப்படும் இரண்டு சென்ட் நிலத்திற்கான 50000 ₹ கொடுத்து உதவும் பயனாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் .
(கிளப் டென்க்காக)
ஷாகுல் ஹமீது
தொடர்புக்கு – பூராசாமி 95669 74061