கல்குருத்தின் இணையர்

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெயமோகன்,

கதையைப் படிக்கும்போது சினிமாவில் காட்டப்படும் பெரியவீடு ஆனால் மலையின் பக்கத்தில் அமைந்துள்ளது. வீட்டின் வாசல்கதவுக்கு நேரெதிரே பின்வாசல் கதவு.பின்வாசல் கதவின் வலது பக்கத்தில் பழைய அம்மிக்கல். அங்கிருந்து நடக்கும் தொலைவில் புது அமிக்கல்லாகும் பாறை.அதனருகில் கல்லாசாரி, காளியம்மை. அவர்களுக்கு பின்புறம் சற்று நடக்கும் தொலைவில் மலை. நான் கற்பனை செய்துகொண்ட அழகம்மையின் இல்லம். கதை மூன்று தம்பதிகள் வழியே எனக்குள் விரிந்துகொண்டது.

கல்லாசாரி – காளியம்மை

உனக்கு தோதான துணையாவெனறிய அவங்களோடு ஒரு மலையேற்றம் செல்ல வேண்டுமென்று படித்துள்ளேன்.பயணமும், அதன் சவாலும் அவர்களை நம் மனதுக்கு அடையாளம் காட்டிவிடும். அப்படித் தேடி அமைந்த இணக்கமான இணைகள் இவர்கள்.நல்லூழ் பெற்றவர்கள். காளியம்மைக்கு காபி ரொம்ப பிடிக்கும். கல்லாசாரிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருக்கு ஒரு காபி போதாது, போகிற இடத்தில் அவருக்கு மட்டும் இரண்டு டம்ளர் கேட்க முடியாது.காளியம்மை காபியை துறக்கிறாள்.துறவும் மேலான பிணைப்பல்லவா!

பாட்டன் – பாட்டி

நானே உணர்ந்தேனா இல்லை எங்கோ படித்தேனா தெரியவில்லை.சில தம்பதிகளின் முகம் காலப்போக்கில் ஒரு மாதிரி இருப்பதாய் தோன்றும்.மனம் ஒன்றானபின் முகத்தில் வெளிப்படுகிறது. இரண்டு தம்பதிகளிடம் அப்படி உணர்ந்துள்ளேன். பாட்டனும், பாட்டியும் அப்படித்தான் இருப்பார்கள். குருத்தாகும் மூத்தவர்கள்.

கண்ணப்பன் – அழகம்மை

மூத்ததாகும் குருத்து. படித்த சிலநொடிகளில் அழகம்மை மனதுக்கு நெருக்கமாகிட்டாள். பாட்டன், பாட்டி மேல் அவளுக்கிருந்த ஒவ்வாமை எனக்கு இவள் இப்படியில்லையே. இவள் இப்படி இருக்க முடியாதேவென தவித்தேன்.பாட்டன், பாட்டி மேல் வெறுப்பில்லையென  வரிகள்வந்தபின் சமாதானமானேன். அழகம்மையாய் நான் நினைத்தது துரியோதன் மனைவி பானுமதி. சிறு சிறுமையும் பானுமதியிடம் வெளிப்பட மனம் ஒப்பவில்லை. தயக்கங்கள், ஒவ்வாமைகள் இருக்கலாம், அதை கடப்பதாலே அவர்கள் மேலானவர்கள். அம்மிக்கல்லில் நீலம் மேடு, பள்ளத்தை காட்டும் தருணம் அவளுக்கு ஒவ்வாமையை போக்கியது.கல்லாசரியின்  மூத்ததும் குருத்தாகும் சொல் மந்திரமாய் அவள் மனதுக்குள் நின்றிருக்கும். இனி அவள் கண்ணப்பனையும் சீராக்குவாள்.

அன்புடன்,

மோகன் நடராஜ்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/


கல்குருத்து- கடிதம் -1
கல்குருத்து -கடிதம்-2
கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து- கடிதம்- 6

கல்குருத்து கடிதம்- 7

கல்குருத்து- கடிதம் -8

கல்குருத்து -கடிதம் -9

கல்குருத்து கடிதம் 10

கல்குருத்து கடிதம் 11

கல்குருத்து கடிதம் 12

கல்குருத்து- கடிதம் -13

முந்தைய கட்டுரைசடம் கடிதங்கள்-5
அடுத்த கட்டுரைதேவிபாரதி விருதுவிழா- கடிதம்