கல்குருத்து -கடிதங்கள் 12

கல்குருத்து- சிறுகதை

அன்பின் ஜெ,

வணக்கம்!

ஒரு சிறுகதையின் தாக்கம், எத்தனை கணங்கள் மனதுக்குள் நீடிக்கும்..? தளத்தில் வெளிவந்து இன்று [நவம்பர்-12] மூன்றாம் நாள்.

வீட்டு கொல்லையில் நட்டு இருக்கும் தென்னம்பிள்ளையோ, வாழைக்கண்ணோ, கண்விழிக்கையில்….குருத்து விட்டுடுச்சி….” என்று கொண்டாடி  மகிழ்வோம்.

முடிவுறவும், துளிர்க்கவும் இருக்கும் இரு வாழ்க்கை சித்திரங்கள். இடையில் கல்லில் எழும் குருத்து

வீட்டின் கொல்லைப்புறத்தில் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மியும் குழவியும் இருந்தாலும்,அதனை எண்ணற்ற முறை கடந்து சென்றிருந்தாலும், கடந்த மூன்று நாட்களாய், கல்லெழு விதையாய் வெவ்வேறு  கோணங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…[நேற்றிரவு, முதல் முதலாய் குழவிக்கல்லை கையில் எடுத்து, தடவிப் பார்த்தேன்].

இலக்கியவாதிகள் படைப்பினூடாக ஒரு நிகர்வாழ்க்கையை உருவாக்கி, அதன் பின்னணியில் நின்று பேசுகிறார்கள். உணர்ச்சிமிக்க மொழியில் , கச்சிதமான சொற்களில் உரையாடுகிறார்கள்.https://www.jeyamohan.in/159187/ பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள்.

மொழி,சொற்கள் மட்டுமல்ல……அருவுருவமாய் எங்களோடு உரையாடியபடி இருக்கிறீர்கள்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

 

அன்புள்ள ஜெ

கல்குருத்து கதை இன்னும் நீண்டநாட்களுக்குப் பேசப்படுமென நினைக்கிறேன். நுட்பமான கதை.அதில் ஒரு வகையான ஒழுகிச்செல்லும் லாகவம் உள்ளது. எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு இயல்பாக இறுதியான கவித்துவ உச்சம் நோக்கிச் செல்கிறது. எத்தனை கதாபாத்திரங்கள். சிற்பி, அவர் மனைவி, பால்கறக்க வருபவன், இரு கிழடுகள், வீட்டுவேலைக்காரி, கல்யாணவீட்டுக்கு வந்தவர்கள், [அதில் கரடிநாயரும் உண்டு] அனைவரையும் இணைத்துக்கொள்கிறது. வாழ்க்கையின் ஒரு பெரிய வட்டத்தையே காட்டிவிடுகிறது. ஆனால் மிக இயல்பாக நிகழ்கிறது. இந்த ஒழுக்கைத்தான் நுட்பமாக எழுதுவதை பயில விரும்பும் இளம் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான கதைகளில் இவை தனித்தனியாகவே நின்றுகொண்டிருக்கின்றன

ராஜ்குமார்

 

கல்குருத்து- கடிதம் -1
கல்குருத்து -கடிதம்-2
கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து- கடிதம்- 6

கல்குருத்து கடிதம்- 7

கல்குருத்து- கடிதம் -8

கல்குருத்து -கடிதம் -9

கல்குருத்து கடிதம் 10

கல்குருத்து கடிதம் 11

முந்தைய கட்டுரைஇலவச காமிக்ஸ்கள்
அடுத்த கட்டுரைதமிழ்நூல்தொகையா, திராவிடக் களஞ்சியமா?