இசையிருவர்

நாதஸ்வரம் பற்றி இந்து நாளிதழின் துணையாசிரியரும், நாதஸ்வர – தவுல் ரசிகருமான கோலப்பன் ஒருமுறை சொன்னார். “நாதஸ்வரம் மட்டும் ரொம்ப நல்லா இருந்தா மட்டும்தான் கேக்கமுடியும். இல்லேன்னா வெறும் சத்தம்தான். சுமாரான வாசிப்புன்னு ஒண்ணு கிடையாது”

ஏனென்றால் சுமாராக வாசிப்பவர்கள் விட்டு விட்டு மூச்சிழுப்பார்கள். இசையலைகளை துண்டு போட்டு சிதைப்பார்கள். மூச்சு தீர்ந்துவிடும் உச்சத்தில் கூசவைக்கும் அபஸ்வரம் வெளிப்படும். ஆகவே நான் நாதஸ்வரத்தை ஓர் ஐந்து நிமிடம் கேட்பேன். அதிலேயே செவிகொடுப்பதா வேண்டாமா என்று முடிவுசெய்துவிடுவேன்.

சமீப காலமாக நல்ல நாதஸ்வரம் காதில் விழுவது அரிதாகிவிட்டது. ஏனென்றால் செலவு மிகுதி. கொங்குநாட்டில் பெருஞ்செலவில் திருமணவிழாக்களை நடத்துபவர்கள், நூறு வகை உணவுகளை பரிமாறி வீணடிப்பார்கள். ஆனால் மிகச்சுமாரான உள்ளூர் நாதஸ்வரக்காரர்களை கொண்டுவந்து வாசிக்கவைத்து அருங்கொடுமை செய்வார்கள். அரிதாக செவிகளின் விழுந்த நல்ல இசை சித்தார்த் பிரதித் இருவரும் இசைத்தது.

ஆனால் சினிமாப்பாட்டுகளுக்கு இவர்கள் வாசித்தவையே அதிகமும் காணக்கிடைக்கின்றன. இந்த இசை பிரபலமாக இதெல்லாம் தேவைப்படுகின்றனவோ என்னவோ. நாதஸ்வரம் இவர்கள் கையில் இனிதாக குழைகிறது. அபஸ்வரமே இல்லை. வாழ்க

https://www.youtube.com/channel/UCkv_mA-NwST-NgAiAkMxwdw

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 9
அடுத்த கட்டுரைடிசம்பர், பொன் முத்துக்குமார்