அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய கவிஞர் தேவதேவனின் கவிதைகளை தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிடும் பெருங்கனவு என்பது நெடுங்கால விழைவாக தங்கிக்கிடந்த ஒன்று. அத்தகைய கனவொன்று யதார்த்தத்தில் நிகழ்கையில் வெறும் நன்றிப்பெருக்கு மட்டுமே எஞ்சுகிறது. ஆகவே, இதுவரை அச்சில் வெளிவராத தேவதேவன் கவிதைகளைத் தொகுத்து, அதை இருபெரும் தொகுதிகளாக, தேர்ந்த அச்சுத்தரத்தில் உருவடைந்த புத்தகங்களாக வெளியிடும் செயற்பணியைத் துவக்கியுள்ளோம். ஆனால், இப்பெரும்முயற்சியை நிறைவுற நிறைவேற்ற உங்கள் ஒவ்வொருவரின் உதவிப்பங்களிப்பையும் தன்னறம் வேண்டுகிறது.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் படைப்புச்சூழலில் கவிதைகளின் பண்பாட்டுத் தொடர்ச்சியை முன்செலுத்திச் செல்கிற ஒரு பெருங்கவிஞனுக்கு சமகால வாசிப்புமனங்கள் இணைந்து முன்வைக்கும் சிறுபடையல் என்றே இவ்விரு நூல்களையும் கருதுகிறோம். குழந்தைமையை கைவிட்டுவிடாத கவிப்பெருமனமாக இச்சமகாலத்திலும் அவர் நம்முடன் இருப்புகொள்வது நிச்சயம் போற்றத்தக்க ஒன்று. அதிர்ந்து ஒலிக்காத தன்னுடைய படைப்புகளின் ஆழமைதிக்குரலால் அவர் எழுப்பியிருக்கும் கவிப்புல விரிவு நம்மை என்றும் வியந்து வணங்கித் தொழவைப்பது.
கெட்டி அட்டை மற்றும் தேர்ந்த வடிவமைப்புடன், இக்கவிதைநூலின் இரு பெருந்தொகுதிகளும் தனித்தனியாக சிலநூறு பக்கங்கள் உடையதாக உருப்பெற உள்ளது. இவ்விரு பெருந்தொகுதிகளுக்கான முன்வெளியீட்டுத் திட்ட தொகையாக ரூ.900 முடிவுசெய்திருக்கிறோம். முதற்கட்டமாக, குறைந்தபட்சம் 300 தோழமைகள் இப்புத்தகத்திற்காகத் தொகை செலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், கடன்நெருக்கடிகள் ஏதுமின்றி இப்புத்தகத்தை அச்சுப்பதிப்பதற்கான பொருளியல் சூழலை தன்னறம் நூல்வெளி எட்டிவிட முடியும். முன்பதிவு செய்யும் தோழமைகளுக்கு ஜனவரி முதல்வாரத்தில் புத்தகங்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
தன்னறத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் துணையிருந்து கரங்கொடுக்கும் தோழமைகள் இந்த முன்வெளியீட்டுத் திட்ட முயற்சிக்கும் பங்களிக்குமாறு பணிந்து கேட்கிறோம். தவிர்க்கவே இயலாத பெரும் கவியாளுமையாக இச்சமகாலத்தில் நமக்கெல்லாம் ஆதர்சனமாகத் திகழும் கவிஞர் தேவதேவனின் படைப்புத்தொடர்ச்சி முழுமைபெற்று நீட்சியடைய உதவுங்கள்
~
முன்வெளியீட்டுத் திட்ட விபரங்கள்:
தேவதேவன் கவிதைகள்
(இதுவரை அச்சில் வராத கவிதைகளின் இரு பெருந்தொகுப்புகள்)
புத்தக விலை (கெட்டி அட்டை – இரு தொகுதிகள்) ரூ: 1200
முன்வெளியீட்டுத் திட்டத்தில் (அஞ்சல் செலவு உட்பட) ரூ: 900
முன்பதிவு செய்ய: http://thannaram.in/product/devadevan-kavithaigal/
வங்கிக்கணக்கு விபரங்கள்:
THUMBI
Acc.no : 59510200000031
Bank of Baroda
Branch : Moolapalayam – erode
IFSC : BARB0MOOLAP (fifth letter is zero)
Gpay No – 9843870059
தொடர்புக்கு: 9843870059, [email protected]
(வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை செலுத்தும் தோழமைகள் தங்களுடைய முழுமுகவரியை அஞ்சல் எண் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்டு எங்களுக்கு குறுஞ்செய்தி / வாட்சப் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டுகிறோம்)
~
கரங்குவிந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி