கதைகள், கடிதங்கள்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகன்

நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். பேசாதவர்கள் படித்தேன்.

‘ஜெயிலர்களுக்கே அரசியல் கைதிகள் மேல் மரியாதை வர ஆரம்பித்தது. ’ஒருவேளை சுயராஜ்யம் கிடைத்தால் இவர்கள் நம் எஜமானர்களாக வந்தாலும் வருவார்கள்’ என்று ஜெயிலர் குட்டப்பன் பிள்ளை சொன்னதும் நாங்களெல்லாம் சிரித்தோம். ஆனால் அது எல்லாருக்கும் உள்ளூர நடுக்கத்தை உருவாக்கியது.’

இந்த வரிகளைப் படித்தபோது ராஜ்மோகன் காந்தியின் Modern South India: A History from the 17th Century to Our times நூலில் படித்த திவான் சிபி ராமஸ்வாமி ஐயரின் ராஜினாமா கடித வரிகள் ஏனோ நினைவு வந்தது:

“On 14 August, he resigned as dewan. Five days later he left the state.

On 28 July 1947, in a letter contemplating resignation, Iyer had written to the ruler:

‘By temperament and training, I am unfit for compromises, being autocratic and over decisive. I don’t fit into the present environment.’

இந்த கடித வரிகளை out of context ஆக குறிப்பிடும் நோக்கமில்லை. இந்த பத்திக்கு முந்தைய பக்கங்களில், ராஜ்மோகன் காந்தி, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான-ஆங்கிலேய உறவுகளையும் சி.பி.ரா அன்னி பெசன்ட்டின் காலத்தில் காங்கிரஸில் இருந்ததையும் காந்தியின் தலைமையேற்பிற்கு பின் காங்கிரசிலிருந்து விலகியதையும் இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக ஆலய நுழைவில் ஐயருக்கு இருந்த  பங்கையும், அதனால் கேரள பழமைவாதிகளின் வெறுப்புக்கு ஆளானதையும், அதே சமயம் அன்று கேரளாவில் நடந்து கொண்டிருந்த அரசியல் இயக்கங்கள் அவை நிகழ்த்திய மாறுதல்கள் அவற்றின் வீச்சு பற்றி கொஞ்சம் அறியாமையுடன் இருந்ததையும் பதிவு செய்கிறார் தான். கருப்பும் வெளுப்புமாய் தானே மனிதர்கள்.

அன்புடன்

மங்கை

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலமறிய ஆவல்.( நல்லதொரு பாட்டின் முதல் வரிகள்)எனது 72 வயதில் தமிழில் பண்பட்டபுத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்து இன்புற்றிருக்கிறேன். தற்போது தங்களின் விசும்பு படித்துக்கொண்டுஇருக்கிறேன்.

அதில் ‘ உற்று நொக்கும் பறவை’ படித்தபின்னர் எனதுள் எழுந்த எண்ணங்களை தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.இக்கதையில் பகிரப்பட்ட செய்திகள் தங்களின் கற்பனையா? ஆச்சரியம் அடைகிறேன். தற்பொழுது உள்ளமத சம்பத்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் தங்களின் கற்பனைக்குஉண்மை சேர்க்கும் விதமாக உள்ளது என்று தோன்றுகிறது.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்களை சந்தித்து அளவளாவ வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

நலத்துடன் இருக்கவும்.

ராமதாஸ்.

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க அமேசான்

ஜெயமோகன் நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

முந்தைய கட்டுரைஒழுகிச்சென்ற ஒரு வாரம்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யனின் வண்ணங்கள்- ஜெயராம்