பின் தொடரும் நிழலின் குரல் வாங்க- மின்னூல்
பின் தொடரும் நிழலின் குரல் வாங்க– அச்சுப்பிரதி
இனிய ஜெயம்
சில தினங்கள் முன்பு நற்றுணை விவாதக் கூடுகை வழியே மீண்டும் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் விவாதிக்கப்பட்டது. அந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் அது பெரிதும் ஈழச் சூழலுடன் இணைத்து விரித்துப் பொருள் கொள்ளப்பட்டது. இன்றைய விர்ச்சுவல் உலக வலைச் சூழலில் அந்த நாவலை ஒரு பரந்த பகைப்புலத்தில் வைத்து ஹைப்பர் டெக்ஸ்ட் ஆக்கி வாசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உதாரணமாக பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் இயங்குவிசைகளின் ஒன்றான இரு பெரும் படைப்பாளிகள் தாஸ்தாவெஸ்கி மற்றும் லெவ் தல்ஸ்தோய் இருவரது சரிதமும் முன்னர் எடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் இப்போது காணொளியாக காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்து விட்டு இந்த நாவலை வாசிக்கப் புகுந்தால் இந்த நாவலில் அந்த படைப்பாளிகள் வரும் நாடகங்களின் பரிமாணம் இன்னும் ஆழம் பெறும்.
அவர் வாழ்ந்த இடங்கள், அவரது குடும்ப மற்றும் சமூக சூழல், அவரது படைப்புகள் இவற்றுடனான தாஸ்தாவெஸ்கி வாழ்வு.
தல்ஸ்தோய் வாழ்வும், அவரது படைப்பு சூழல், குடும்ப சூழல், சமூக சூழல் ஆகியவற்றின் முக்கியத் தருணங்களில் அவருடன் இருந்த மகளின் நேர்காணலும் கொண்ட ஆவணம்.
நாவலுக்குள் வரும் அக்டோபர் புரட்சி நிகழும் சூழலும், லெனினின் முதல் உரையும், கதைக்குள் கதையாக வரும் ஜான் ரீட் எழுதிய உலகை குலுக்கிய பத்து நாட்கள் நூலையும் ஹைப்பர் டெக்ஸ்ட் ஆக வாசிக்கலாம். இங்கே அந்த நூலை ஒட்டிய படத்தையும் காணலாம்.
அக்டோபர் புரட்சிக்குப் பிறகு ருசியாவில் தேனாறும் பாலாறும் மட்டுமே ஓடியதாக ருசியா சிதறும் வரை உலகில் பலர் நம்பிக் கொண்டிருந்தனர். உண்மையில் புரட்சிக்குப் பிறகு அந்தப் புரட்சியில் கைப்பற்றிய அரசாங்கத்தை தக்க வைக்க லெனின் படாத பாடு பட்டிருக்கிறார்.நிகழ்ந்த பல இடர்களில் அவர் பஞ்சம் எனும் பேரிடரை மிக மோசமாக கையாண்ட வகையில் பல லட்சம் மக்கள் மாய்ந்திருக்கிறார்கள். மனிதரை மனிதர் கொன்றுண்ணும் அளவு பஞ்சம் என்கிறது சில வரலாற்று குறிப்பு.
சூழலைக் கையாள ருசியா சர்ச்சுகளின் செல்வங்களை கைப்பற்றும் வகைமை எல்லாம் நிகழ்ந்திருக்கிறது. இங்கு கேரள பேராலய புதையல் கிடைத்ததும் எழுந்த குரலின் விதை அங்கிருந்து வந்து விழுந்த ஒன்றே. வலது சாரிகளுக்கும் இதில் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. சமீபத்தில் கோவில் செல்வங்களை எடுத்து ‘மக்கள் சேவை’ செய்யலாம் எனும் வகையிலான நியோ இந்துத்துவர் பதிவு ஒன்று கண்டேன்.
ருஷ்யப் பெரும்பஞ்சம் 1920 ன் காட்சி.
அடுத்து வந்த ஸ்தாலினின் வாழ்வு.
ஹிட்லர் உருவாக்கிய வதை முகாம்கள் குறித்து ஹாலிவூட் வழியே சலிக்க சலிக்க உண்மை கதைகள் இன்று வரை வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு கொஞ்சமும் குறை இல்லாதவை ஸ்டாலின் உருவாக்கிய வதை முகாம்கள். அந்த முகாம் ஒன்றின் பதிவு இது. ருஷ்ய மாண்புக்கு இழுக்கு சேர்க்கும் இத்தகு இருள்வரலாற்று தடங்களை அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்போதைய புடின் அரசின் உள்ளே இருக்கும் ருஷ்ய தேசியவாத குரல்கள் எழுப்பி வருகின்றன.
உடையும் ருசியா சரியும் கனவு.
புகாரின் வாழ்வு. அன்னா லாரினா சாட்சியம் வழியே.
நாவலில் புகாரின் ரயில் பயணம் ஒன்றினில் விவசாயிகள் பனி வெளியில் கிடந்து கூட்டம் கூட்டமாக சாகும் காட்சியை ஜன்னல். வழியே காணும் சித்திரம் ஒன்று வரும். (அந்தப் புரட்சி அரசாங்கம் தந்தை உள்ளத்துடன் தேச முன்னேற்றத்துக்கு கொண்டு வந்த நல்ல திட்டங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்தால் பனி வெளியில் வீசப்பட்டவர்கள் அவர்கள்.)
புகாரினுக்கான பலிச் சோற்றை சைபீரிய பனிவெளி ஓநாய்கள் வந்து உண்ணும் காட்சி ஒன்று உண்டு.புகாரின் கர்த்தர் காலடிகளைத் தொடர்ந்து சென்று அவரை முதலில் காணும் காட்சி.
இந்த உச்ச தருணங்களுக்கான இசை இது.
இவற்றுடன் இணைந்து வாசிக்கப்பட வேண்டியது இகர் குசெங்கோ எழுதிய The fall of A Titan நாவலும்.
இப்படி முன் பின்னாக பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் சரியான சந்தர்ப்பங்களில் அதற்கான நூல்கள் மற்றும் காணொளிகள் வழியே அந்த நாவல் எனும் அலை எந்த கடலில் இருந்து எழுந்ததோ அந்த கடல் எனும் பகைப்புலத்தின் பின்னணியில் இந்த நாவலை நிறுத்தி பார்த்தும் வாசித்தும் விரித்தெடுக்கையில், நாவலின் நாயகன் அருணாச்சலம் சென்று விழும் இருளின் ஆழம் மற்றும் நாவல் கையாளும் பிற அலகுகளின் பரிமாணம் இன்னும் தீவிரம் கொள்ளும்.
கடலூர் சீனு
பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்
பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்
பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்
பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து
மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல் – அறம்
பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்க