வெண்முரசு இசைக்கொண்டாட்டம், செய்திகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். அக்டோபர் 9, 2021 அன்று இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் நடந்த வெண்முரசு இசைக்கொண்டாட்டம் நிகழ்வு பற்றி, வெவ்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில், அக்டோபர் 19,2021, பிற்பகல் 1:30-க்கு செய்தி குறிப்பு வெளியாகியது.

நான் கவனித்தவரையில், அந்த செய்தி குறிப்பு சிகாகோ Daily Herald, பிட்ஸ்பர்க் post-gazette, நியூயார்க் Buffalow News  என வெவ்வேறு நகரங்களில் முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்தன.  இந்த விஷயம் எந்த அளவுக்கு முக்கியமானது, அதன் பின்னணி என்ன, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவில் உள்ளதா என்றெல்லாம் சரிபார்த்தபிறகு வருவதால், பத்து நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பது என்னுடைய புரிதல். இந்த செய்தி குறிப்பில், விழாவில் பங்கு கொண்டு சிறப்புரையாற்றிய ஒவ்வொருவர் கூறியதிலும் சிறந்ததை எடுத்து, சரிபார்த்த பிறகு வெளியிட்டுள்ளார்கள். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர், MarketWatch-ல் ஒரு நாவலை சிறப்பித்து கொண்டாடியது வந்தது ஆச்சரியமாக உள்ளது என்றார். “மணி ரத்னம், TIME பத்திரிகையால் அகில உலக அளவில் தரம் வாய்ந்த நூறு படங்களைக் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் என்று பாராட்டுப் பெற்றவர். அவர் ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைக்கிறார் என்றால், அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்று MarketWatch கண்டுபிடித்திருக்கும்”  என்றேன்.

இசைக் கொண்டாட்டமும், அதைத் தொடர்ந்து வரும் கடிதங்களும், செய்தி குறிப்புகளும்  மேலும் பல புதிய வெண்முரசு வாசகர்களைக் கொண்டுவரும்.  மகிழ்வாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

  1. Daily Herald:

Director Mani Ratnam Releases Musical Tribute to Jeyamohan’s Epic Venmurasu | Daily Herald

  1. Pittsburgh Post-Gazette:

markets.post-gazette.com/postgazette/news/read/41911989

  1. The Buffalo News:

Director Mani Ratnam Releases Musical Tribute to Jeyamohan’s Epic Venmurasu (buffalonews.com)

முந்தைய கட்டுரைஇலக்கியம் என்னும் குமிழி
அடுத்த கட்டுரைமலையாள வாசகர், கடிதம்