கோவை நண்பர் ஓவியர் ஜீவா,சினிமாவையே முதன்மை ஆர்வமாகக் கொண்டவர். அவர் ‘ரசனை’ இதழில் எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளின் தொகுதியான ‘திரைசீலை’ சிறந்த சினிமாநூலுக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. இக்கட்டுரைகள் ரசனையில் வெளிவரும்போதே இவற்றைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். ஜீவாவின் எழுத்தை சினிமா ரசனைக்குறிப்புகள் என்றே சொல்லவேண்டும். மலையாள கலைப்படங்களின் ஆராதகரான ஜீவா,சினிமாவின் உணர்ச்சிநிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்.
குமரிமாவட்டம் பூதப்பாண்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர். இவரது தம்பிதான் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டன். வழக்கறிஞர் படிப்புக்குப் பின் ஓவியக்கூடம் ஒன்றை நடத்திவரும் ஜீவா நாஞ்சில்நாடனின் நெருக்கமான நண்பர். நாஞ்சிலின் அனேக நூல்களுக்குப் படம் வரைந்திருக்கிறார்
ஜீவாவுக்கு வாழ்த்துக்கள்