கடிதங்கள்

அன்பு ஜெய்மோகன்,
 
நான் உங்களது பதிவுகளை google reader மூலம் subscribe செய்து படித்துவிடுகிறேன். அதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பதிவுகளின் முதற்சில வரிகள் மட்டும் முகப்பில் தெரியும். முழுப்பதிவையும் படிக்க அதன் மீது சொடுக்கி உங்கள் தளத்திற்கு வந்து படிக்க வேண்டும்.
 
நிற்க.
 
என் பிரச்சனை என்னவென்றால் முகப்பில் தெரியும் ஒரு சில வாக்கியங்களை வைத்து அது எனக்கு படிக்கவிருப்பமுள்ள கட்டுரையா என்பதை ஊகிக்க முடியவில்லை. உங்கள் பதிவுகளின் தலைப்புகள் மிகவும் பொதுத்தன்மையுடன் ‘கும்பகோணம்’, ‘மதுரை ஆதீனம்’ என்று வைப்பதால் அத்தலைப்புகள் கட்டுரையின் உள்ளடக்கம் பற்றி எதையும் சொல்வதில்லை.  இத்தலைப்புகளை ‘மதுரை ஆதீனத்தின் அர்த்தமற்ற பேச்சு’, ‘கும்பகோணத்தில் எனது உரை’ என்பன போன்று சிறிது குறிப்புணர்த்துமாறு கொடுத்தால் என்னைப்போன்ற பலருக்கு உபயோகமாக இருக்கும். :-)
 
இப்படி ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாமா எனத் தெரியவில்லை!
 
நன்றி
சாய் மகேஷ்
(சாணக்கியன், http://www.vurathasindanai.blogspot.com/)

அன்புள்ள சாய் மகேஷ்

ஒரு கட்டுரையை நீங்கள் தவிர்ப்பதைத் தவிர்ப்பதுதான் எனக்கு புத்திசாலித்தனமான செயலாக இருக்க முடியும்?
பொதுவாக ஒரு கட்டுரையை அப்படி ஒரு நிபந்தனையுடன் ஆரம்பிக்க முடியாது. தலைப்பையும். அது அந்த பேசுபொருள் சார்ந்த விஷயம் மட்டுமே
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
”எதையோ குழிதோண்டிப்புதைத்து வைத்துவிட்டார். இடம் மறந்துவிட்டது. பதற்றமும் அழுகையுமாக தோண்டுகிறார். தோண்டிச்செல்லும்போது ஒரு மண்டையோடு சிக்குகிறது. அதை சரியாகப் பார்க்காமலேயே எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு மீண்டும் தேடுகிறார். கிடைக்கவில்லை. அழுகையும் ஆவேசமுமாகப் புலம்புகிறார் “எங்க வச்சேனோ பாவி மட்ட எடம் மறந்துபோச்சே…” சட்டென்று திரும்பி மண்டை ஓட்டிடம் “…இதில சிரிப்பு வேற” உடனே அதைக் கவனித்து ஆ என்று ஓர் அலறல்”

நீங்கள் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வரும் காட்சியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் பஞ்ச் லைன் வேறு மாதிரி இருந்ததாக ஞாபகம். மண்டையோட்டை பார்த்து “எவனோ சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்யா” என்று வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

வணக்கம் குரு.,
      
                                “காய்த்த மரம் தான் கல்லடி படும்” என்பது எவ்வளவு உண்மை என்று திண்ணை வலை தளத்தில் உங்களை பற்றிய விமர்சனத்திலிருந்து தான் தெரிந்துகொண்டேன், தகுதியே இல்லாதவர்கள் கூட உங்களை விமர்சிப்பது வருத்தமளிக்கிறது, இருந்தபோதிலும் பாவண்ணணின் “சிகரத்தில் நிற்கும் ஆளுமை” யை படித்த உடன் தான் மன நிறைவாக உணர்ந்தேன். “பல இளம் வாசகர்களின் நெஞ்சில் ஜெயமோகன் உருவாக்கிய இந்த மனஎழுச்சி அவர் அடைந்த முக்கியமான வெற்றி. இந்த வாசகர்கள் எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக ஆகலாம். ஆழ்ந்த சிந்தனையாளர்களாகவும் மாறலாம். விரிவான விமர்சனப்பார்வை கொண்டவர்களாகவும் உருவாகலாம். வாசக அனுபவத்தையே மனநிறைவான அனுபவமாக எண்ணித் திளைத்திருக்கலாம்” என்ற கருத்துக்கள் என் போன்ற வாசகர்களை பெருமைகொள்ள வைக்கிறது.
 
                            எனது ரசனை மற்றும் ஆர்வம் சரியான பாதைகளில் தான் செல்கிறது என்பதை மீண்டும் உறுதி செய்துகொண்டேன். கவிஞர் தமிழச்சி,கனிமொழி போன்ற சிறுமிகள் உங்களுடன் மோத,விவாதிக்க வருவதை நகைச்சுவயாக கவனித்துக்கொண்டுள்ளேன். ஏட்டறிவால் வருவது ஒருக்காலும் அனுபவத்திற்கு நிகராகாது, இவர்கள் சிற்சில வாசிப்புகளுக்கு பிறகு உங்களை போன்ற ஆன்மீகமான விடுதலையை, மெய்ஞான தேடல் உடையவர்களிடம் விவாதிப்பதற்கே ஒரு தகுதி வேண்டுமென எண்ணுகிறேன்.
 
                        தங்களின், குரு நித்யா சொன்னது போல் “மக்கள் வருவார்கள், போவார்கள் நான் சென்றுகொண்டே இருப்பேன்” என நீங்கள் எண்ணுவதாக நான் நினைத்து கொள்கிறேன்.
 
                                                                                                                                             பணிவன்புடன், மகிழவன்.
அன்புள்ள ஜயமோகன்

கால்ட்வெல்லுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்ச்ரியமாக உள்ளது. கால்ட்வெல் துதி தமிழ் நாட்டில் அளவற்றது. நவீன தமிழக சமூக, கலாசார சூழலுக்கு அவர்தான் வித்திட்டார் போல பலர் பேசுகிறனர். மொழியியல் மொழிகளை சில பொது குணங்கள் வழியாக பாகுபாடு செய்து , மொழி “குடும்பங்களை” அமைக்கிறது. இதற்கு முன்னோடி விலங்கியல். எலும்பு, சதை, வால், மற்றும் இதற குணங்கள் வழியாக விலங்கு “குடும்பங்களை” விலங்கியலாளர் அமைக்கிறனர். ஆனால் புலியும், பூனையும் ஒரே ‘குடும்பம்’ என்ற விஞ்ஞான தீர்ப்பினால் பூனைக்கொ, புலிக்கோ ஒரு உதவியும் கிடைக்கப் போவதில்லை, ஒரு உபயோகமும், ஆதாயமும் இல்லை. அதைப் போல் தமிழ், பிராகுவி, குவி போன்றவை ஒரு ‘குடும்பம்’ என்ற துணிபு தமிழிக்கோ, தமிழ் க்லாசாரத்திற்க்கோ, தமிழ் சமுதாயத்திற்க்கோ ஒரு ஆதாயமும் இல்லை. பிராகுவிக்கும் ஒரு உபயோகமும் இல்லை. கால்ட்வெல் தன் மொ ழி ஆராய்ச்சிக்கு எல்ளிஸ் போன்ற மற்ற ஆராய்சியாளர்களை நம்பியிருந்தார். ஒரு அமெச்சூர் மொழியியலாளர், ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை இவ்வ்ளவு மேடை மேல் ஏற்றி பூசிப்பது, 20ம் நூற்றாண்டின் தமிழ் கலாசாரத்தின் வரட்சியைத்தான் காட்டுகிறது.
வ.கொ.விஜயராகவன்

அஞ்சலி ,நாகேஷ்


முந்தைய கட்டுரைநான் கடவுள்
அடுத்த கட்டுரைஅரசியல் சரி, தேசியம்:கடிதங்கள்