மண்ணுள் உறைவது

சிறுகதையின் ஊசல் இருமுனைகளை தொட்டு ஆடுவது ஆர்வமூட்டுவது. எழுபதுகளில் ‘சிறுகதையில் கதை எதற்கு?’ என்ற குரல் எழுந்தது. வெறும் நிகழ்வுகளாலான கதைகள் வந்தன. கதை இருந்தாலே அது ஒரு படி கீழ் என சொல்லப்பட்டது. ஆனால் நான் என்னை தொன்மையான கதைஞர்களில் ஒருவனாகவே எண்ணினேன். கதை என்னும் வடிவின்மேல் பெரும்கவர்ச்சி அன்றுமின்றும் உண்டு. ஆனால் ‘கதையற்ற’ கதைகளையும் எழுதியிருக்கிறேன்.

இன்று இரண்டு மரபுகளும் தொடர்கின்றன. வெறும் சித்தரிப்புகள், உரைநடைத்துண்டுகளாக அமையும் கதைகள் உள்ளன. ஆனால் அவை கவிதையை, மெய்த்தரிசனத்தை சென்று தொட்டு நினைவில் வளரவில்லை என்றால் உண்மையில் அவற்றால் பயனே இல்லை. நினைவுகூர முடியாதது நீடிக்காது என்பதே இலக்கியத்தின் நெறிகளில் முதன்மையானது. கதை நம் நினைவில் நீடிக்கிறது. ஏனென்றால் ஒரு கதையின் வடிவத்தை எத்தனைச் சுருக்கினாலும், உருமாற்றினாலும் அது பெரிதாக மாறுபடுவதில்லை.

இன்றுவரும் கதைகளில் கதைவடிவம் மிக்க கதைகள் ஏராளமாக உள்ளன. அன்றாடநிகழ்வுகளில் எதையோ பூடகமாக்கிவைப்பது சிறுகதை என்னும் எண்ணம் மறைந்துவருகிறது. ஐரோப்பிய எழுத்துக்களிலேயே tale, parable வகைக் கதைகளே அதிகமும் கொண்டாடப்படுகின்றன. ஏனென்றால் யதார்த்தச்சித்தரிப்பு இதழியல் மற்றும் காட்சியூடகங்களால் கைப்பற்றப்பட்டு மிகையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது.

சுஷீல்குமாரின் இந்தக்கதையில் இருக்கும்  ‘தொன்மக்கதைத்தன்மை’ மிக முக்கியமானது. அகழப்படுவது அம்மனிதர்களின் கூட்டான ஆழம் ஒன்று.

மண்ணுள் உறைவது


மரம்போல்வர்- சுஷீல்குமார்

மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

முந்தைய கட்டுரைஒரு கோவை வாசகர்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5