ஈராறுகால் கொண்டெழும் புரவி

ஈராறுகால் கொண்டெழும் புரவி வாங்க

ஈராறு கால்கொண்டெழும் புரவி என் இலக்கியப்படைப்புகளில் தனித்தன்மை கொண்ட ஒன்று. அது மெய்மைத்தேடலை பகடியுடன் முன்வைக்கும் ஒரு படைப்பு. அந்தப்பகடிக்கு சித்தர்மரபில் முக்கியமான இடம் உண்டு. திருமந்திரம், சித்தர்பாடல்களின் வரிகளை பகடியாக மறுவுரு செய்து அமைக்கப்பட்ட அதன் மொழிநடையும், வட்டாரவழக்கின் கேலியும் நீண்ட இடைவெளிக்குப்பின் வாசிக்கையிலும் என்னை புன்னகைக்கச் செய்தன்.

ஈராறுகால் கொண்டு எழும் புரவி என திருமூலர் காலத்தைச் சொல்கிறார். காலம் தாவுவதன் சித்திரம்தான் அந்தக் குறுநாவல். ஒரு இறுதித்தாவல் வழியாக அது தன் நீள்பயணத்தை பெருஞ்சுழிப்பாக ஆக்கிக்கொள்கிறது அந்நாவலில். ஈராறுகால்கொண்டு எழும் புரவி மற்றும் சிறுகதைகள் அடங்கிய இந்நூலை மீண்டும் வெளியிட்டிருக்கிறது விஷ்ணுபுரம் பதிப்பகம்

ஈராறு கால்கொண்டெழும் புரவி- கடிதங்கள்
ஈராறுகால் கொண்டெழும் புரவி -ஜினுராஜ்
கால்கொண்டெழுவது… கடிதம்
ஈராறுகால் கொண்டெழும் புரவி – விமர்சனம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

வடிவமைப்பு கீதா செந்தில்குமார்
முந்தைய கட்டுரைஅரசியல், ஆசிரியன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமணிரத்னம், ஒரு பழைய பேட்டி