அன்புராஜ் கடிதங்கள்

அன்புராஜ் ஒரு கடிதம்
கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

அன்புள்ள ஜெ

இந்த கடிதமெழுதிய திரு. எட்வின்ராஜ் அவர்களுக்கு மிக்கநன்றி .

நானும் இதை முன்பு  படிக்க தவறிவிட்டேன் .

மூன்று நினைவலைகள்;

  1. உலகதிரைப்படவிழாவில் கனடா நாட்டின் டொரோண்டோ நகரில், இந்த திரைப்படத்தை பார்த்தேன். அன்புராஜ் அவர்களின் அனுபவங்களும் இதை எடுத்த பிரெஞ்சு கதை ஆசிரியர்/இயக்குனரின்  எண்ணங்களும் ஒரே மாதிரியாக இருந்தன. (அடி, உதை ,சித்ரவதை தவிர !)

https://www.imdb.com/title/tt12444440/

  1. அதே திரைப்பட விழாவில் இந்த மராத்தி திரைப்  படத்தையும் பார்த்தேன். மிக நல்ல படம்.  ஆனால் பழைய படம். இந்த இளைய இயக்குனரை இங்கு அறிமுகப்படுத்துவதற்காக  மறு  பதிவாக இந்த திரைப்படத்தை வெளியிட்டார்கள்

அன்புராஜ் அவர்களின் நீதிமன்ற அனுபவங்களும்  இந்த படத்தில் வரும் காட்சிகளும் மிகவும் ஒத்துப்ப்போகின்றன. அன்புராஜ் அவர்களின்  நிலைமை மிகவும் மோசமானது. https://www.imdb.com/title/tt3717068/mediaviewer/rm869198336/

  1. கிட்டத்தட்ட ? 55 வருடங்களுக்கு முன்னர் குமுதத்தில் பட்டாம்பூச்சியியை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படித்து ஒரு கைதி விடுதலைக்கு இப்படி போராடுவான என்று யோசித்தது நினைவுக்கு வருகிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி. அன்புராஜ்  அவர்களின் தொண்டு நீடிக்க வாழ்த்துக்கள்.

மனோகர்.

***

முந்தைய கட்டுரைஉளச்சோர்வு -கடிதம்
அடுத்த கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்