எழுதுவதை பயில்தல்

எழுதும்கலை வாங்க

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க

வணக்கம்,

என் பெயர் புஷ்பநாதன், பொறியியல் பட்டதாரி, புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லூர் கிராமம்…

நான் உங்களது அறம் மற்றும் உலோகம் எனும் இரண்டு புத்தகங்களை படித்திருக்கிறேன்.. தொடர்ந்து உங்கள் நாவல்களை வாங்கி வாசிக்கத் திட்டமிட்டுள்ளேன்.. தற்போது உங்களுடைய பேருரைகளை யூடியூபில் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.. உங்கள் உரைகளில் குறிப்பாக நவீன இலக்கியம் குறித்து எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது..  நான் அவ்வப்போது ஒரு சில சிறுகதைகள் எழுதி பார்த்திருக்கிறேன்.. நாவல் ஒன்று எழுதிப் பழகத் திட்டமிட்டு என் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை சிறு நாவலாக எழுதி வருகிறேன்….

எனக்கு உள்ள சில சந்தேகங்களை உங்களிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்..  என் கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் வந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்….

எழுத்தாளர் ஆவதற்கு ஒருவன் எப்படி தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்?2. எந்த வகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

புஷ்பநாதன்

அன்புள்ள புஷ்பநாதன்,

எழுத்தாளர் ஆவதற்கு முதன்மையானது வாசிப்பு. தமிழில் இதுவரை என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று வாசித்தால்தான் நீங்கள் மேற்கொண்டு எழுதமுடியும். தமிழில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க படைப்புகளை சில ஆண்டுகள் முழுமூச்சாக வாசியுங்கள்.

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அதில் விரிவான இலக்கிய அறிமுகமும் குறிப்பிடத்தக்க நூல்களின் பட்டியலும் உள்ளது. பாருங்கள்.

எழுதுவதென்பது மொழியில் உங்களை வைத்திருப்பது. ஆகவே தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள். எழுத்தை தானே பரிசீலித்து மேம்படுத்திக்கொண்டே இருங்கள். எழுத்தின் வடிவங்களையும் எழுதுவதன் முறைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்

நான் எழுதும்கலை என ஒரு நூல் எழுதியிருக்கிறேன். உதவியானதாக இருக்கும்

ஜெ

நாவல் – ஒரு சமையல்குறிப்பு

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை
அடுத்த கட்டுரைவாசித்தல், கடிதம்