வணக்கம். ஆவணப்படம் இதுவரை எட்டு அமெரிக்க நகரங்களில், வாசக நண்பர்களின் உதவியுடன் திரையிடப்பட்டு வெண்முரசுவின் மகத்துவம் மக்களின் உரையாடலில் இடம்பெற்றுள்ளது. படம் முடிந்ததும் எங்களிடம் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று, வெண்முரசுவின் செம்பதிப்பை இந்தியாவிலிருந்து எப்படி தருவிப்பது என்பதுதான். தளத்தில் இலவசமாக வாசிக்கலாமே என்று சொன்னால், இல்லை, நண்பர்கள், திரையிடலின்போது வைத்திருந்தார்களே, அதுதான் வேண்டும் என்பார்கள். வெண்முரசு புத்தகங்களை, சில முக்கிய நகரங்களுக்கு பத்து பத்து செட்டாக தருவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டுள்ளோம்.
அடுத்து திரையிடப்படவிருக்கும் அமெரிக்கா மற்றும் கனடா நகரங்களின் விபரங்கள் கீழே.
ஆகஸ்ட், 1, ஞாயிற்றுக்கிழமை, 2:45 PM – 4.45 PM PDT, சாக்ரமாண்டொ, கலிபோர்னியா
Century Roseville 14 and XD
1555, Eureka Road, Roseville, CA 95661
தொடர்புக்கு– அண்ணாதுரை கோவிந்தசாமி, Phone: 1-916-396-4702
ஆகஸ்ட், 7 – சனிக்கிழமை, 5.00 PM – 7.00 PM,போர்ட்லாண்ட், ஆரிகன்
Clinton Street Theater
2522, SE Clinton St, Portland, OR 97202
தொடர்புக்கு– பிரபு, [email protected], Phone:971-717-4223
ஆகஸ்ட், 29, 2021 – ஞாயிற்றுக்கிழமை, 1:00 PM EST, டொராண்டோ, கனடா
Woodside Cinema,
1571 Sandhurst Circle
Scarborough ON
M1V TV2 (Finch Ave and McCowan Rd Scarborough (Toronto))
தொடர்புக்கு – காலம் செல்வம் , [email protected], Phone – 1-416-731-1752
உஷா மதிவாணன், [email protected], Phone – 1-416-495-8186 / 1-647-808-2904
உங்கள் நகரில் திரையிட, மேலும் பொதுவான விபரங்கள் அறிய [email protected]க்கு மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)