அன்புள்ள ஜெயமோகன்
அவ்வபோது ஆங்கிலத்தில் சரிந்தால், மன்னித்து கொள்ளுங்கள். என் போதாமையே அதற்கு காரணம். தனியார்மயம்பற்றி நீங்கள் கூறியது சரியே.
கட்டுபாடின்மையே (lack of governance) தற்போதைய உலகளாவிய பங்கு சந்தை, வங்கி நிறுவனங்கள், வீட்டு கடனளிக்கும் நிறுவனங்கள் (real estate corporations), ஆடொமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மையம் என முன்னாள் பெடெரல் பேங்க் சேர்மன் அலன் க்ரீன்ச்பன் கருத்து தெரிவித்துள்ளார். முக்கியமாக கவனிக்க வேண்டியது – பங்கு சந்தைகளில் ‘பேராசை நல்லதே’ (greed is good) என்கிற சிந்தனை நவீன பங்கு சந்தை குமிழை வளர்த்து விட்டுள்ளது.
ஊழல்கள் மலிந்த சில பொருள் முதலீடு கம்பெனிகளில் (investment corporations), பங்குதாரர்களை மகிழ்விக்க, CEO fraud இல் ஈடுபடுகிறார். அளவிற்கு அதிகமான சம்பளம் மற்றும் போனஸ்கள். உள்ள கணக்கர்கள் (auditors) பொய்யர்கள். அரசாங்கத்திடமிருந்து உதவி பணம் பெற்றால், உயர் அதிகாரிகளுக்கு மில்லியன்களில் பணம். நான் இந்தியா பற்றி கூறவில்லை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கம்பனிகள் பற்றியே. (400 பில்லியன் டாலர் bailout அமெரிக்கா வங்கிகளுக்கு) அதில் எக்க்சிகிடிவ்களின் போனஸ் வேறு. இதனை அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார்.
Bernie Madoff என்கிற முதலீட்டாளர் ஐம்பது பில்லியன் டாலர் அளவில் பலரை ஏமாற்றியுள்ளார். SEC போன்ற regulatory bodies சொல்லியும் ஒரு விதமான நடவடிக்கையும் எடுக்காமல் வளர்ந்து பட்ட மாபெரும் ஏய்ப்பு.
http://www.forbes.com/2008/12/12/madoff-ponzi-hedge-pf-ii-in_rl_1212croesus_inl.html
தற்போது அமெரிக்கா பென்ஷன் நிறுவனங்களும் பங்கு சந்தையில் (and real estate market) உலவியதால் (CALPERS) புத்தி கொள்முதல் (அதாவது நஷ்டம்)
http://articles.latimes.com/2008/nov/13/business/fi-calpers13
CA and CPA Institutes முறை தவறி நடந்த கணக்கர்களை இது வரை ஒன்றும் செய்யவில்லை. பன்னாட்டு கம்பனிகளின் கணக்கர்கள் (Pwc, Deloitte Coprorations)
உலகளாவிய அளவில் ethics நீர்த்து போய் இருக்கிறது.
ஐஸ்லாந்து இல் பண மதிப்பு பல ஆயிரம் பங்கு தேய்ந்தது. ஸிம்பாப்வே இல் ஒரு பில்லியன் டாலர் நோட்டை அச்சடித்து உள்ளனர்.
வளர்ந்த நாடு அனைத்திலும் அரசாங்கம் உதவி செய்து தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் அன்றாட வியாபாரம் செய்யும் நிலை. இந்த சித்தாந்தம் சோசியலிசம் அருகே. மிகவும் சுவாரசியமான விஷயம்,
அமெரிக்காவில் வெளிப்படைத்தன்மை இருந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. (அதாவது தவறு நடக்கும் போது தெரியும். ஆனால் அதை சரி செய்ய முடியாது)
கசப்பு கொண்ட தன்மைக்கு மன்னிக்கவும்.
புதிய ஊழல்கள் செய்ய அமெரிக்காவும் இங்கிலாந்தும் கற்று கொடுக்கிறது.இந்த விதத்தில் இந்தியாவில் பொதுத்துறையின் கட்டுப்பாடு மிகவும் தன்னடக்கத்துடன் அனைவரும் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய விஷயம்.
அன்புடன்
முரளி
அன்புள்ள ஜெ
சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கணக்கில் உள்ளதைவிட மிகக்குறைவான லாபம்தான் அந்நிறுவனத்தால் ஈட்டப்பட்டது என்றும் அவையே தணிக்கை மூலம் அங்கீகரிக்கச்செய்யபப்ட்டன என்றும் சொல்கிறார். ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையான லாபம் சத்யம் நிறுவனத்தில் இருந்து உறிஞ்சப்பட்டு பிற பணிகளுக்கு– நில முதலீடுகளுக்கு — கொண்டுசெல்லபப்ட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். விஷயம் தெரிந்த பலரும் இதையே சொல்கிறார்கள். நம் ஆங்கில ஊடகங்கள் சத்யம் நிர்வாகியின் ‘ஒப்புதல் வாக்குமூலத்தையே’ இறுதி உண்மையாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
நம்முடைய பொதுத்துறை வங்கிகளும் பலமுறை திவாலாகும் நிலைக்கு வந்து அரசாங்கத்தால் மீட்கபப்ட்டிருக்கின்றன. இந்தியன் வங்கியை நீங்கள் உதாரணமாகக் கொள்ளலாம். இத்தனைக்கும் அவர்கள் அமெரிக்க வங்கிகளைப்போன்ற ஊக வணிகங்கள் மற்றும் முதலீடுகளில் ஈடுபடவும் இல்லை.
நீங்கள் இடதுசாரிகளைப்பற்றிச் சொன்னீர்கள். அவர்களும் குருமூர்த்தியும் மட்டுமே தனியார் மயத்தை எதிர்த்ததாகச் சொல்லியிருந்தீர்கள். இந்திய இடதுசாரிக்கட்சிகள் எதிர்க்கட்சி என்ற நிலையில் எந்த அடிபப்டைக்கொள்கை நிலைபாடும் இல்லாதவை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் சீன நிறுவனங்களின் நலன்களுக்காகவே இவ்விஷயங்களில் தலையிடுகிறார்கள் என்று ஊகிக்க சான்றுகள் பல உள்ளன. இந்த இணைப்பை பாருங்கள். சீனா இந்தியப்பொதுத்துறையில் ஊடுருவ அவர்கள் விரும்புகிறார்கள்
http://imdownloads.rediff.com/money/2006/oct/12bspec.htm
கீழ்க்கண்ட இணைப்பையும் நான் சிபாரிசு செய்கிறேன் சுத்நதிரச் சந்தையின் சுழற்சி விதிகளைப்பற்றிய ஒரு வித்தியாசமான பார்வையை இது முன்வைக்கிறது.
இந்த நீளமான கட்டுரை அறுபதுகளில் எழுதப்பட்டது. ஆனால் இன்றும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. ஜான் மேய்னார்ட் கீய்ன்ஸ் என்ற பொருளியலாளரின் பெயரில் கீனீஸியன் கோட்பாடு என்று ஒன்று பொருளியலில் உண்டு. பெரும்பாலான பொருளியலாளர்கள் கீனீஸியக் கோட்பாடை பின்பற்றுகிறார்கள். இந்த இணைப்பு அதை விமரிசனம் செய்கிறது
எஸ்.வெங்கட்
அன்புள்ள வெங்கட்
உங்கள் இணைப்புகளை இப்போதுதான் படித்தேன். கீனீஸியக் கோட்பாடு இப்போது ஒரு பழைய மூலிகை மீண்டும் கண்டடையப்பட்டதுபோல விவாதிக்கபப்டுகிறது.
துக்ளக் இதழில் குருமூர்த்தி அமெரிக்க பொருளியலமைப்பு சரியக்கூடும், அது முழுக்க முழுக்க ஊகங்களை மட்டுமே சார்ந்து கட்டபப்ட்டிருக்கிரது என்று நான்கு வருடங்களாக மீண்டும் மீண்டும் எழுதிவந்தார். அதை நான் ஒரு நொந்துபோன தேசியவாதியின் சாபம் என்றே எண்ணிவந்தேன். அது உண்மையானபோது ஆச்சரியமாக உணர்ந்தேன். சத்யம் பற்றி அது ஒரு கூட்டு ஊழலாக இருக்கலாம் என்று அவர் துக்ளக் இதழில் எழுதியிருக்கிறார்
ஜெ
88
அன்புள்ள ஜெ
அன்பையன் வைத்தியர் சொன்னதை : “கொச்சனுக்க ஜாதகம் நான் பாத்தேன். சரஸ்வதி கடாட்சம் உண்டு…” – மிகச் சாதாரணமான ஒரு பதிலில் கூட நிரூபிக்கிறீர்கள் – “பழைய மூலிகை மீண்டும் கண்டடையப்பட்டதுபோல”.
பதிலுக்கு மிக்க நன்றி.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் ‘Credit excesses’ பற்றி 1999-ல் இருந்தே படித்து வருகிறேன். www.dailyreckoning.com என்ற தளத்தில். முதன்முறை 1996ல் அமெரிக்கா போனபோது, இங்கு யாரும் சேமிப்பதில்லை என்பதே சிறப்பாகச் சொல்லப்பட்டது.
Mainstream media உலகம் முழுவதிலுமே உண்மையைச் சொல்வதில்லை என்ற எண்ணம் இப்போது பரவலாக உணரப்படுகிறது. இந்தியாவில் இது இன்னும் மோசம். dailyreckoning.com போன்ற தளங்கள் எனக்கு உதவின.
வேண்டுகோள் – இந்திய மீடியாவின் பொய்களை தமிழில் தொடர்ந்து எழுதுங்கள் – “இந்திய இதழியலின் மாபெரும் கள்ளநாணயங்களில் ஒன்றை ” – ராஜ்தீப் பற்றி நீங்கள் சொன்னது.
எஸ்.வெங்கட்