நித்யாவின் சொற்கள்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு…

நித்ய சைதன்ய யதியின் தத்துவங்களையும் கனிவிருப்பையும் மனமேந்தும் விதமாக, கடந்த சித்திரை 1 அன்று நிகழ்ந்த கல்லெழும் விதை நிகழ்வில், யதி ஒளிப்படங்கள் மற்றும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் தன்மீட்சி வாசகங்களையும் இணைத்து ஒளிப்படச் சட்டகங்கள் உருவாக்கி, நிகழ்வரங்கின் சுவர்களில் பொருத்தியிருந்தோம்.

யதி ஒளிப்படச் சட்டகங்கள் எல்லாவற்றின் வடிவமைப்பையும் இங்கு பகிர்கிறோம். வார்த்தையாலோ முகமிருப்பலோ தத்துவநீட்சியாலோ அகநம்பிக்கை அடையவிரும்பும் அனைவருக்குமான உளச்சுடரை ஒளிப்படுத்தும் ஒளிப்படங்களாக இவை நம் மனதில் நிலைக்கட்டும்!

தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைஜெ.சைதன்யா- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!