நான் அங்கு பணிக்குச் சேர்ந்திருந்த இரண்டாவது மாலையின் காட்சி அது. வாகனம் நிறுத்துமிடத்தில் தன் காருக்குள் அமர்ந்து நந்தினி அழுதுகொண்டிருந்தாள். ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தும் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை. பொது இடத்தில் தன்னிரக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அந்தப் பலவீனத்தோடு அக்கணமே ஒரு பிணைப்பு உண்டாகிவிட்டது.