‘குற்றமும் தண்டனையும்’ வாசித்து முடித்து உழன்று கொண்டிருக்கையில், அதை எப்படியாவது எழுதி விட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எங்கு ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நாவலின் உட்கூறுகள் கதையில் எண்ணற்றவையாக இருந்தன. எண்ணங்கள் ஒரு இடத்தில நிலைபெறாமல் ஓடிக்கொண்டே இருந்தது. அதனால் எண்ணங்களை அப்படியே எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன்.
எழுத முற்படுகையில் சொற்கள் வர கடினமாக இருந்தது. அதனால் ஒரு புது முயற்சி செய்து பார்த்தேன். என் எண்ணங்களை அப்படியே “Speech to Text” வழியாக, நான் பேசி சொற்றொடர் ஆக்கினேன். ஒரு பத்திக்கு மேல் செல்ல முடியவில்லை. திரும்பவும் எழுத ஆரம்பித்தேன். நாவலின் கதை மாந்தர்களைக் கொண்டு ஒவ்வொரு சம்பவமாக நினைவு கூர்ந்து, எழுதி முடித்தேன். கதையில் வாழ எழுத ஒரு சிறந்த வழி.
பிரவீன்
தர்மபுரி