பெண்ணமுது

உண்ணமுத நஞ்சாகி ஒண்மதுரைச் சொக்கருக்கு என்

பெண்ணமுத நஞ்சாயோ பேதைமீர்- தண்ணிதழி

இந்தா நிலமேவெனச் சொலார் என் செய்வாள்

மந்தா நிலமே வரின்

[குமரகுருபரர்- மதுரைக் கலம்பகம். செவிலியன்னைக் கூற்று]

உண்ணும் அமுதென நஞ்சையே கொண்ட சொக்கருக்கு என் பெண் எனும் அமுதம் எப்படி நஞ்சானாள் பேதையரே? தண்ணிதழ் கொன்றையை இந்தா, நில் அம்மையே என்று சொல்லி அளிக்கமாட்டார் என்றால், தென்றலும் வருமென்றால், என்னதான் செய்வாள் அவள்

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி -திருத்தங்கள்
அடுத்த கட்டுரைசூல்கொண்ட அருள்