தமிழ்ப்பண்பாட்டைபேணுதல்:கடிதம்

அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.  நலமா?

‘தமிழ்ப் பண்பாட்டைப் பேணுதல்’ சம்பந்தமான  கடிதங்கள் பதிவு பார்த்தேன்.

ஃபிஜித் தீவுகளில் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் வாழ்க்கைமுறையைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. ஆறு வருடங்கள் அங்கே வாழ்ந்தோம். ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்  மீண்டும் ஒரு பயணம்( திருமண விழாவில் கலந்து கொள்ள) போய்வந்தேன். அதுவும்  20 வருட இடைவெளியில்.
சிலவற்றை இங்கே எழுதி இருக்கின்றேன்.  நேரம் கிடைக்கும்போது வாசிப்பீர்கள் என்ற  நம்பிக்கையுடன் சுட்டிகளை அனுப்புகின்றேன்.

http://thulasidhalam.blogspot.com/2008/07/2.html

http://thulasidhalam.blogspot.com/2008/07/3.html

http://thulasidhalam.blogspot.com/2008/07/5.html

என்றும் அன்புடன்,
துளசி

மன்னிக்கவும் துளஸி
தாமதமாகவே நேரம் கிடைத்தது. பயண அனுபவங்களை படித்தேன். பயண அனுபவங்களை அரட்டைபோல எழுதுவதில் உள்ள தனித்தன்மை என்னவென்ம்றால் ஒருவர் அதீத ஆர்வத்துடன் சொல்வதுபோல தோன்றுவதுதான். ·பிஜியின் நீங்காத வறுமை மட்டும் வாசிக்க கஷ்டமாக இருந்தது. சிறிய சுற்றுலாத்தீவுகள் அனேகமாக எல்லாமே வளமாக– சர்வாதிகார ஆட்சியுட்ன் தான் இருக்கின்றன இல்லையா
ஜெ
முந்தைய கட்டுரைதனியார்மயம் ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்