காட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி
பனை குறித்த எனது தேடுதலில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்து கொண்டது ஒரு பேராசீர்வாதம் என்றே கருதுகிறேன். எங்களது நட்பு, சுமார் 20 ஆண்டுகளாக தொடர்வது. அவரது சங்கச் சித்திரங்கள் தொடர் வழியாக அவரை நான் கண்டுகொண்டேன். பார்வதிபுரத்தில் வசிக்கிறார் என்றறிந்தபோது அவரை சந்திக்க பார்வதிபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்றேன்.