அஞ்சலி:வே.ஆனைமுத்து

வே.ஆனைமுத்து

ஈ.வே.ரா அவர்களின் படைப்புக்களை சேகரித்துக் காலவரிசைப்படி தொகுத்த அறிஞர் வே. ஆனைமுத்து ஏப்ரல் 6 ,2021 அன்று மறைந்தார். கோவையில் ஒருமுறை அவரை சந்தித்து வணக்கம் சொல்ல வாய்த்திருக்கிறது.

ஓர் ஆளுமையுடன் முழுமையாக தன்னை பிணைத்துக்கொண்டு வாழ்க்கையை முற்றளிப்பது என்பது அறிவுச்செயல்பாட்டில் முதன்மையான ஒரு நிகழ்வு.பெரும்படைப்பாளிகள், பேரறிஞர்கள், பொது ஆளுமைகள் ஆகியோருக்கு அவ்வண்ணம் ஒருவர் அமையும்போதே அவர்களின் பங்களிப்பு நிலைபேறடைகிறது. ஈ.வே.ராவுக்கு அவ்வண்ணம் அமைந்தவர் ஆனைமுத்து.

அஞ்சலி

முந்தைய கட்டுரைஅஞ்சலி- சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன்
அடுத்த கட்டுரைஇருபத்தைந்து கதைகள்- கடிதம்