அன்னம்- ஒரு கடிதம்

அன்புநிறை ஜெ,

கதைத் திருவிழாவின் நூறு கதைகளில் ஒன்றாகிய அன்னம்(https://www.jeyamohan.in/132369/) சிறுகதை இந்த வாரம் சுக்கிரி குழுமத்தில் கலந்துரையாடுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக இக்கதையை மீள்வாசிப்பு செய்யும் பொழுது கீதை உரையின் ஒரு பகுதியான “கர்மயோகம் 4”-ன்(https://www.jeyamohan.in/7038/) இலக்கிய வடிவமாக அக்கதை தோன்றியது.

“அன்னத்திலிருந்து உயிர்கள் உருவாகின்றன.

மழையிலிருந்து அன்னம் உருவாகிறது

வேள்வியால் மழை உருவாகிறது

வேள்வியோ செயல்களால் உருவாகிறது

செயல் பிரம்மாவிலிருந்து உருவாகிறது

பிரம்மா எழுத்திலிருந்து உருவானவர் என்று அறிக.

ஆகவே எங்கும் நிறை பரம்பொருள்

என்றும் வேள்வியில் உறைகிறது.”

என்ற பாடலைக் குறித்த கட்டுரை அது.

ஓஷோ உரை கேட்ட பிறகு கீதை உரையை  மீள்வாசிப்பு செய்து கொண்டிருந்தேன். இரு மீள்வாசிப்புகளும் சேர்ந்து, இந்த அன்னம் கதையும்  கீதை கட்டுரையும் பிரிக்க முடியாதபடி பிணைந்துகொண்டது.

“வேதங்களில் அன்னம் என்பது விரிவான பொருளில் கையாளப்பட்ட ஒரு கலைச் சொல். முதல் தளத்தில் அது ‘உணவு’தான். ஆனால் பூமியில் உள்ள எல்லாமே எதற்கோ உணவுதானே?” – என்ற கீதை உரையிலிருந்து இக்கதையின் இழை துவங்குகிறது. அதையே அன்னம் கதையில்  //யக்ஷகானத்தில் அன்னசம்யோகம் என்று சாப்பாட்டைச் சொல்கிறார்கள். உடலும் உணவும் அன்னம் என்றுதான் சொல்லப்படுகின்றன. அன்னம் என்றால் பிசிக்ஸில் மேட்டர் என்கிறோமே அது. அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.// என்று கிருஷ்ண பட் அவர் கலந்து கொண்ட முதல் விருந்தை விவரிக்கிறார்.

கீதை உரை அதிலிருந்து தொடங்கி பிரணவவாதம் குறித்துப் பேசுகிறது.

“பிரபஞ்சத்தை அதில் உள்ள பருப்பொருள் அப்பருப்பொருளை இயக்கும் கருத்து என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். பருப்பொருளை அன்னம் என்று கூறலாம். கருப்பொருளை சத் என்று கூறியது வேததரிசனம். அது என்ன என்ற வினாவை பிரம்மாண்டமாக அது எதிர்கொண்டது. “

என்பதைத் தொடர்ந்து வரும் வரிகளின் வாயிலாக சென்று

“இந்த அகன்ற பருப்பொருள் வெளியை கருத்து வடிவமாக எடுத்துக் கொண்டால் அது ஒரு மாபெரும் ஒலிமயமான வெளியாக இருக்கும் அதாவது எவராலும் கேட்கப்படாத ஒலியாலானதாக எவரும் உணராத மொழிமயமானதாக, இல்லையா? அந்த மொழிவெளியை அல்லது ஒலி வெளியை இவையனைத்திற்கும் மூலப்பரப்பாக கொள்ள வேண்டும். அந்த வெளியின் வேராக, தொடக்கப்புள்ளியாக உள்ள ஒரு முழுமுதல் ஒலி எதுவாக இருக்க முடியும்? அதுவே ஓம். அல்லது பிரணவம். மெளனம் ஒலியாக உருவம் கொள்ளும்போது ஏற்படும் முதல் ஒலி ஓங்காரமே. அதுவே ஒலிகளுக்கெல்லாம் அன்னை. ஒலிக்காட்டுக்கு மூலவிதை. அதுவே தொடக்கம். அதில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதுவே படைப்பு சக்தியாகும்.”

இதையே புராணங்கள் எளிமையாக்கி பிரம்மாவின் தியானத்தின் முடிவற்ற மெளனத்தில் இருந்து ஓம் என்ற ஒலி முதலில் பிறக்கிறது. அந்த ஓங்காரத்தில் இருந்தே மூவுலகங்களிலும் பிறந்து வருகின்றன என்று கூறுகிறது. ஒலி எப்படி பருப்பொருளாக ஆகிறது என்பதற்கான விளக்கமே பிரணவவாதம் என்கிறது அவ்வுரை.

சாகிபை படுக்கையில் பசியின்றி உணவின்றி வருத்துவது எது, அவரது வாழ்நாள் அன்ன வேள்வி அதன் கருத்து வடிவில் அது அவருக்கு என்னவாக இருந்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டால் இவ்விதம் இணைந்து கொள்கிறது.

அவரது அன்ன விருந்து எனும் பரு உலக செயல்பாடு நின்று போய், படுக்கையில் பக்கவாதத்தில் விழும் அவருக்கு வேறேதும் குறைகள் இல்லை. அனைவரும் அவரை ஒரு அரசனைப் போல, கைக்குழந்தையின் தேவைகளை நிறைவேற்றுவது போல கவனிக்கிறார்கள். ஆனால் அவரது வேதனை இந்த சாமானிய தளத்தின் நிகழ்வுகளால் அல்ல. அவரது பசி வேறொன்று. அவரது ஆன்மா வீட்டை சூழ்ந்த சூனியத்தில் அல்லல்படுகிறது.  அவ்வளவு நாட்கள் ஆட்களை நிறைத்துக் கொண்டு உணவு வழங்குதல் என்னும் செயல் வழியாக அவர் எப்போதும் தனைச் சூழந்தவர்களின் நிறைவின்மைகளை நிறைவு செய்கிறார். அவரைச் சுற்றி இருந்தவர்களின் தேவை  பசித்தவர்கள் என்பதால் உணவு, பொருள் இல்லாதவர்களுக்கு பொருளுதவி, சமையற்காரனுக்கு பாராட்டு. சமூகத்தில் சம இடம் அளிக்கப்படாதவர்களுக்கு நிகரான இடம். அவர்களது நிறைவின் ஒலியைத்தான் அகத்தில் நிறைத்துக் கொள்கிறார்.

“காலிப்பானைகளுக்கும் குடங்களுக்கும் ஒரு பதற்றம் இருக்கிறதைப்போல தோன்றுவதில்லையா சார்? அவை வாய் திறந்து அலறுகின்றன. குருவிக்குஞ்சுகள் வாய்திறந்து எம்பிக்குதிப்பதுபோல. தண்ணீரை அள்ளி ஊற்ற ஊற்ற இன்னும் இன்னும் என்கின்றன. அதன்பின் நிறையும் ஓசை. அது ஒரு பெருமூச்சு. ஓம் என்ற ஓசை அது.” என்று சொல்கிறார் கிருஷ்ண பட்.

அவருக்கு தொடர்பேயற்ற  மனிதர்களின் குரல்கள் கூட அந்த நிறைவின் ஒலியாகவே  அவருக்குப் பொருள்படுகின்றன. ஒரு வாழ்நாள் சாதகம். எனவே பிறருக்குப் பொருளற்றதெனத் தோன்றும் சூன்ய எண்ணில் ஒலிக்கும் அந்த உரையாடல்களின் பொருளற்ற ஓங்காரம் அவருக்கு மீண்டும் அந்த நிறைவை அளிக்கிறது. அந்த நிறைவின் மலர்ச்சியோடு உதிர்கிறார்.

கைவிடப்பட்ட கோயிலில் இருண்ட கருவறையில் பூசாரி என்ற தோற்றத்தோடு அறிமுகமாகும் கிருஷ்ண பட் அதே வேலையைத்தான் செய்கிறார். அந்த சாகிபின் நிறைவின்மையை கனவில் அறிந்து அதை நிறைக்கும் அவரும் அந்த வேள்வியில் இணைகிறார்.

“வேள்வியோ செயல்களால் உருவாகிறது

செயல் பிரம்மாவிலிருந்து உருவாகிறது

பிரம்மா எழுத்திலிருந்து உருவானவர் என்று அறிக.” என்ற தத்துவத்தை ஒரு கதையாக உணரத் தந்தமைக்கு நன்றி ஜெ.

மிக்க அன்புடன்,

சுபா

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகுமிழிகளை முன்வைத்து…- கடிதம்
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை