விவாதமொழி- கடிதம்

விவாதங்கள் நடுவே-கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நான் இடதுசாரி எண்ணம் கொண்டவன். நீங்கள் வெளியிட்ட பகுதியில் உள்ள கடிதங்களில் வலதுசாரிகள் உங்களை சோ -எஸ்.வி.சேகர் மொழியில் கிண்டல்செய்கிறார்கள்,  இடதுசாரிகள் மொட்டைவசை அளிக்கிறார்கள் என்று இருந்தது

இடதுசாரிகளை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். ஆகவே அவர்களும் விமர்சிக்கிறார்கள். இடதுசாரிகள் இரண்டு வகை. கருத்துக்களை கொள்கைகளையும் அடிப்படைத்தத்துவங்களையும் கொண்டு எதிர்ப்பவர்கள் உண்டு. அவர்கள் கொஞ்சம் குறைவுதான். பொதுவாக அன்றைக்குள்ள அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாக எதிர் கருத்தாளர்களை விமர்சிப்பதுதான் இடதுசாரிகளின் வழக்கம். அவற்றில் அபூர்வமாகச் சில அடித்தளக்குரல்கள் கடுமையாக இருக்கும். ஆனால் இடதுசாரிகளின் விமர்சனம் எப்போதுமே அறிவுபூர்வமானது

மொட்டைவசை என்றால் எது தெரியுமா? இந்து ‘சிந்தனையாளர்’ ஆக அறியப்படும், உங்கள் முன்னாள் நண்பர்களாலும் மகிழ்ந்து கொண்டாடப்படும், இந்து அமைப்பில் முக்கியமான பொறுப்பில் இருப்பவரான  ராஜசங்கர் விஸ்வநாதன் என்பவர் எழுதிய இந்த வரிகள்தான். இந்த வகையில் ஒரு கீழ்த்தரமான வசையை இடதுசாரிகள் உங்கள்மேல் இத்தனை ஆண்டுகளில் எழுதியிருக்கிறார்களா? எந்த எழுத்தாளரைப்பற்றியாவது எழுதியிருக்கிறார்களா?

இங்கே இணையத்தில் பேசிக்கொண்டிருக்கும் மொத்த இந்துத்துவக்கும்பலும் இதே தரம்  கொண்டவை. இதே மனிதர் கொஞ்சகாலம் முன்பு உங்களுடைய ‘சிடி’ ஒன்று திராவிட இயக்கத்தின் கையில் மாட்டியிருப்பதனால் நீங்கள் கட்சிமாறி பேசுகிறீர்கள் என்றும் அந்த சிடி அவர் கைக்கும் வந்துவிட்டது என்றும் ஒரு பதிவுபோட ஒருகாலத்தில் உங்களுடன் வந்து குலவிக்கொண்டிருந்த அத்தனை கும்பலும் சென்று அங்கே இளித்து வைத்தனர்

உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இந்தக்குரலுக்கு தலையாட்டும் கும்பல் என்ன கருத்துநாகரீகம் பேணுகிறது? அவர்கள் பண்பாடு, நாகரீகம் என்ற வார்த்தைகளையே பேசலாமா? இவர்கள்தான் இந்துப்பண்பாட்டின் காவலர்கள் என்றால் அந்தப் பண்பாடு தமிழனுக்கு தேவையா?

என்.ராஜேஷ்குமார்

முகநூல் குறிப்பு

மன்னிக்கவும் ஜி. இந்த ஜெயமோகன் எனும் ஆள் எந்த ஒரு நெறியற்ற முறையற்ற எச்சைப்பொறுக்கி. நீங்கள் எந்த அடிப்படையிலே இந்த ஆளின் அங்கீகாரத்தை கோருகிறீர்கள் என தெரியவில்லை. எதுக்கெடுத்தாலும் மற்றவர்களை வசைபாடும் பிறவி அதுவும் அதன் அல்லைக்கை முண்டங்களும்.

நீங்கள் எழுதிய கடிதத்துக்கு என்ன எதிர்வினை ஆற்றியிருக்கீறது என பாருங்கள். எங்கேயேனும் அந்த த்ராவிட் ஆட்களையோ அல்லது மற்ற மத ஆட்களையோ ஏதேனும் சொல்லியிருக்கிறதா? இல்லை திட்டுவது இந்து மதத்தின் ஆச்சார அனுஷ்டான வாதிகளையும் என்னைப்போன்ற இந்துத்துவ ஆட்களையும் தான். இந்த எச்சைபொறுக்கிக்கு இந்து மதம் அழியவேண்டும் என்பது தான் குறி. அதுக்குத்தான் இந்த பசப்பு வார்த்தைகள்.

இந்த ஆளின் கருத்துப்படி சைவசித்தாந்தம் என்பதே வேறு குறீப்பிட்ட மதத்திலெ இருந்து வந்தது. சைவகுரவர்களின் கொடுமைப்படுத்தலை எழுதுவதே அந்த குறிப்பிட ஆட்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை போன்றது என நம்முடைய வரலாற்றை மறுப்பதிலே இந்த எச்சைபொறுகிக்கு பேரின்பம்.

நீங்கள் எதற்கு இந்த ஆளின் ஏற்பை நோக்கீனீர்கள் என புரியவில்லை. தனியே பேசுவோம். [ராஜசங்கர் விஸ்வநாதன்]

முந்தைய கட்டுரைகதைகளின் முடிவில்
அடுத்த கட்டுரைகவிதைக்குள் நுழைபவர்கள்…