நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? சஷி தரூர்

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு,

நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

சசி தரூரின்நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்‘(Why I am a Hindu?) நூலை வாசித்து முடித்திருக்கிறேன். உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியதால் இக்கடிதம்.

விஷ்ணுபுரம் வாசித்த போது அதில் வரும் தத்துவம் சிற்ப மரபுகள் சார்ந்த விவாதங்கள் கலைச் சொற்கள் போன்றவை என்னை இந்திய சிற்ப ஓவிய மரபையும் அதற்கு அடிப்படையான நம் மரபின் தத்துவங்களையும் பயில வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அதற்கு முன்னரே அவ்வண்ணம் இருந்தாலும் விஷ்ணுபுரம் வாசித்த போது தான் நாம் நம் மரபிலிருந்து எவ்வளவு அன்னியப்பட்டிருக்கிறோம் என்று மேலும் யோசிக்க வைத்தது(அப்படி இருந்தும் கூட நாவலில் வரும் விவாதங்களை ரசிக்க முடிந்ததென்பது வேறு விஷயம்). பிறகு உங்களுடனான சந்திப்புகளில் இந்திய கலை மரபு பற்றிய விவாதங்களின் போதும் அதையே உணர்ந்தேன். ஒரு ஆசானாக எனக்கு இந்திய கலை மரபின் ஒரு வரைபடத்தை அளித்தீர்கள். நீங்கள் அளித்த வரைபடத்தில் நின்று கொண்டு மேலே கற்று அதையெல்லாம் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னீர்கள்.

அம்முயற்சியகளின் ஆரம்பக் கட்டமாக இந்து மரபைப் பற்றிய ஒரு எளிய நூலிலிருந்து தொடங்கலாம் என்று நினைத்து தான் ‘Why I am a Hindu?’ வாசித்தேன். சசி தரூரின் ஆங்கிலம் மீது இருக்கும் மோகத்தாலும் ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளவும் ஆங்கிலத்திலேயே வாசித்தேன். தமிழிலும் சத்யானந்தன் மொழிபெயர்ப்பில் நூல் கிடைக்கிறது.

வாசிப்பு அனுபவம்:


இந்நூல் மூன்று பாகங்களைக் கொண்டது. யாக்ஞவல்கியர், பதஞ்சலி, ஆதிசங்கரர், ராமனுஜர், விவேகானந்தர் போன்ற பேராளுமைகளின் பங்களிப்பால் செழுமையேறிய இந்து மதத்தை தன் மரபாக விவரிக்கும் சசி தரூர் அவர் ஏன் அதை தன் மரபாக முன்வைக்கிறார் என்ற காரணத்தையும் அதன் சிறப்புகளையும் முதல் பாகத்தில் விளக்குகிறார்கூடவே இந்த சமூகத்தில் வேரூன்றிப் போன சாதி அமைப்பையும் கேள்வி எழுப்புகிறார். இரண்டாம் பாகத்தில் இந்துத்வ அரசியலின் வரலாற்றையும் அதனால் இந்து மதம் ஒற்றை படையாக சுருக்கப்பட்டு இந்த மரபு அழிவுக்குள்ளாகும் அபாயத்தையும் விளக்குகிறார். மூன்றாம் பாகத்தில் இந்த மரபை இன்றைய திரிபுகளிலிருந்து(அவர் இதில் இந்துத்வர்களின் பிற்போக்குத் தனங்களையே சாடுகிறார்) மீட்பதைப்பற்றியும் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் இம்மரபின் பங்களிப்பின் தேவையையும் விளக்குகிறார்.

நீங்கள் தமிழ்ச் சூழலை நோக்கியே பேசினாலும் எனக்கு உங்கள் கட்டுரைகள் பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் இந்தியாவில் பலருக்கும் பலனளிக்கும் என்று தோன்றியிருக்கிறதுஇந்த புத்தகத்தின் சிறப்பாக எனக்குப் பட்டதும் நீங்கள் இங்கே தொடர்ந்து முன் வைக்கும் இந்து ஞான மரபின் சிறப்புகளையும் அதேசமயம் நீங்கள் திருப்பி திருப்பி சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்துத்வ அரசியலின் தீங்கையும் ஆங்கிலத்தில் சசி தரூர் இந்நூலில் எழுதியிருக்கிறார் என்பதேயாகும்

காந்தியின் அகிம்சை கோட்பாடுகளுக்குப் பின்னணியாக இருந்தஅத்வைதம்மற்றும் சமணக்கொள்கையானஅனேகாந்தவாதம்‘, விவேகானந்தர்சமலறை மதம்என்ற குறிப்பிட்டு சொன்ன கண்டனம் முதல் எம் எப் ஹுசைன் போன்ற கலைஞர்களை ஆதரித்து நீங்கள் எழுதிய கட்டுரை, பசு மாமிசம் சாப்பிடுபவர்கள் மேல் வன்முறைகளை ஏவி விடுவதைக் கண்டித்து நீங்கள் எழுதிய கண்டனம் என்று உங்கள் கட்டுரைகள் சிலதையும் குறிப்புக்களையும் ஆங்கிலத்தில் விரிவாக தொகுத்துப் படித்தது போன்ற பிரமை இந்நூல் படிக்கும் போது ஏற்பட்டது. ஒப்புநோக்க சசிதரூர் எந்த மதமாற்ற சக்திகளையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் குறிப்பிடாமல் இந்துத்வ ஒற்றைப்படை போக்கையும் அதன் அராஜகங்களையும் மட்டுமே ஆழமாக சாடுகிறார். இந்நூலின் பாதி பக்கங்களையும் அதற்காகவே எடுத்துக் கொள்கிறார்.

உங்கள் கட்டுரைகளையும் உரைகளையும் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும் நீங்கள் இந்து ஞான மரபிற்கும் இந்துத்வ அரசியலுக்கும் உண்டான வேறுபாட்டை எவ்வளவு விரிவாக தொடர்ந்து வலியுறுத்துகிறீர்கள் என்று. ஆனால் அப்படி இருந்தும்இந்துத்வ பாசிசத்தின் இலக்கிய முகம்என்று உங்களைப் பற்றி இங்கே நூல் எழுதப்படுவது வியப்பே. நீங்கள் மரபைப் பற்றி பேசும் எதையும்இந்துத்வாவாகப் எண்ணிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்திய ஆங்கில ஊடகங்களில் ஆங்கிலம் பேசுபவர்களும் ஏன் இங்கே ஹாரிபாட்டர் வகை நூல்கள் வாசிக்கும் அளவே ஆங்கில பரிச்சயம் உள்ள பலரும் கூட நான் புரிந்து கொண்டவரை தன்னை மதத்திற்கும் இந்திய மரபிற்கும் அப்பாற்பட்டதூயஅறிவுஜீவியாகத் தங்களை காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள்(ஆனால் அவர்கள் அணிந்திருக்கும் உயர்வகை கோட்டிற்கு உள்ளே ஆசாரங்களும் ஏன் பழைமைகளும் கூட மறைந்து இருக்கலாம்). அப்படிப்பட்ட இந்திய ஆங்கிலச் சூழலில்நான் ஒரு இந்துஎன்று பெருமையாகக் கூறவும் அனைத்து விவாதங்களுக்கும் இடமளிக்கும் அதன் விரிவை எடுத்துக் கூறவும் அதேசமயம்இந்துத்வஅரசியலை இந்து மதத்திலிருந்து விலக்கிப் பார்த்து விளக்கவும் இளைய ஆங்கில வாசிப்பாளர்களிடம் பொதுவாக செல்வாக்கு உள்ள சசி தரூர் போன்றவர்கள் இருப்பது சிறப்பு.

ஜெயராம்

முந்தைய கட்டுரைபசுமை முகங்கள்
அடுத்த கட்டுரைபாரத் என்னும் பெயர்