அட்டையை அனுப்பிய நண்பர் ‘பிங்க் நல்ல நிறம், குழந்தைகளுக்குப் பிடிக்கும்’ என்று எழுதியிருந்தார். ‘குழந்தைகளுக்குப் பிடித்தால் சரி’ என்று நான் மறுமொழி அனுப்பினேன்.
நிறம் சரிதான், மோடியின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகூட இதே நிறத்தில்தானே இருக்கிறது. இது அக்கால சினிமா நோட்டீஸ் நிறம். எச்சில் தொட்டு விரலில் ஒட்டிக்கொண்டால் மருதாணிபோல ஆகும்.
ஆனால் அந்த நடனம்தான் கொஞ்சம் கோக்குமாக்காக இருக்கிறது. தினத்தந்தியில் பழைய ‘கருத்துப்படங்கள் கணு’ பாணியில். இன்னும் ஸ்டைலாக இருந்திருக்கலாமோ? நான் ஒரு கிறிஸ்டோபர் நோலன் பட வில்லன் அளவுக்கு எதிர்பார்த்தேன்
இருந்தாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மறுதரப்பில் ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன், திருப்பூர் தீக்குச்சி, ராஜசங்கர், ஒத்திசைவு ராமசாமி, திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர், சுரேஷ் வெங்கடாத்திரி, ஸ்டேன்லி ராஜன் அணியினரிடம் இன்னும் தரமாக எதிர்பார்க்கிறேன். ஒரு சாம்பிளை நானே கொடுத்திருக்கிறேன்.