சென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்

நண்பர்களே..

சென்னை வெண்முரசு கலந்துரையாடல் அமர்வுகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு வருடமாக நாம் இமைக்கணம் நாவலை விவாதித்து வருகிறோம். அதன் ஒவ்வொரு பாத்திரம் வாயிலாக அதனை சார்ந்த மற்றும் எதிர் மனோபாவங்களையும் உணர்வுகளையும் கொண்ட பாத்தரங்களையும் ஒப்பிட்டோம். இவ்வாறாக ஒட்டு மொத்த வெண்முரசையும் மீண்டும் விவாதித்தோம்.

இளைய யாதவன், “சொல்லிச் சொல்லிச் சென்றடைந்த முனையில் இறுதிச் சொல்லின்மையுடன்” சுகருடன் உரையாடும் முழுமை பகுதி நம் ஒவ்வொருவரின் அகத்தேடல் சார்ந்தது என எண்ணுகிறோம்.

இமைக்கணத்தின் இறுதி பகுதியான “இறைப்பாடல்” குறித்து வரும் ஞாயிறு  (20-12-2020) நமது இணையவழி கலந்துரையாடல் நிகழும். இமைக்கணம் நாவலில் குறிப்புணர்த்தப்பட்டவை மீண்டும்  உரைக்கப்படும் இந்த பகுதி குறித்து,  இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலில் பங்கு கொண்ட நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.

வெண்முரசு வாசகர்களையும் வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்

20-12-2020

மாலை 5 மணி முதல் 8 மணி வரை

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88194052559?pwd=TnI5bVhOaE5jQXVqUVZxU2gyVDVnZz09

Meeting ID: 881 9405 2559

Passcode: 285929

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்,

தொடர்புக்கு: 9965315137

முந்தைய கட்டுரைஇன்ஃபெர்னோ
அடுத்த கட்டுரைதற்செயல்களின் வரைபடம்- சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்