பைரப்பாவின் மொழிபெயர்ப்பாளர்

ஐயா வணக்கம்

என் பெயர் செல்வராசு நான் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபரிகிறேன்.கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் ‘க்ருஹபங்க ‘ நாவலை எச் வி. சுப்ரமணியன் அவர்கள் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ என்ற பெயரில் நாவல் வெளிவந்துள்ளது. எச் வி. சுப்ரமணியன் குறித்த முழுமையான தகவல்கள் கிடைத்தால் தெரிவியுங்கள்

செல்வராசு
என் அலைபேசி எண் 9787236999
மின்னஞ்சல் rselvarasu1234@gmail.com

***

இனிய ஜெயம்,

மைசூரில் இருந்து திருமதி விஜயா என்பவர் தொடர்பு கொண்டிருந்தார். பைரப்பா நூல்களை கன்னடத்திலிருந்து இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்த்தவர்கள்  குறித்து, அந்தந்த மொழிகளில் பைரப்பாவை  மொழியாக்கம்  செய்தவர்களின் வாழ்வும் பணியும் சார்ந்து அறிமுகம் செய்து கன்னடத்தில் ஒரு நூல் எழுதும் பணியில் இருக்கிறார்.

தமிழில் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலை மொழியாக்கம் செய்த எச்.வி.சுப்ரமணியம் குறித்து தேசிய புத்தக நிறுவனம் உட்பட எங்குமே அடிப்படை தகவல் கிடைக்காமல், தேடுதலின் தொடர்பில் ஜெயமோகன்  தளத்தின் வழியே (அவருக்கு தமிழ் தெரியாது) உதவி எண்ணை அழைத்து விசாரித்தார். எனக்கும் அவர் பெயர் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், மேலதிக தகவல் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரி அளித்தேன்.

சுப்ரமணியம் அவர்கள் குறித்து மேலதிக தகவல்கள் இருப்பின் அவரோடு சேர்த்து எனக்கும் தெரிவிக்கவும். :)

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு, செல்வராசு,

எச்.எல்.பைரப்பாவின் கிருகபங்கா [ஒருகுடும்பம் சிதைகிறது] இந்தியமொழிகளில் எழுதப்பட்ட ஒரு செவ்வியல்படைப்பு. அவருடைய தன் வரலாற்றுச் சாயல் கொண்டது.

இந்த மொழியாக்கம் நாற்பதாண்டுகள் முன்பு செய்யப்பட்டது. அதைச் செய்தவர் எவர் என தெரியாது. தேசியப் புத்தகநிலைய ஆவணங்களில் இருந்து கண்டுபிடித்தால்  மட்டும்தான் வாய்ப்பு.

அல்லது இந்த இணையப்பதிவை கண்டு எவரேனும் தொடர்புகொண்டால் நல்லது

ஜெ

எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
எஸ்.எல்.பைரப்பா
பைரப்பாவின் தரவுகள்
வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா
முந்தைய கட்டுரைதிரௌபதி
அடுத்த கட்டுரைகருவேலம்- கடிதம்