வைஷ்ணவ ஜனதோ

அன்பின் ஜெ,

சமீபத்தில் மிக யதேச்சையாக கண்டுகொண்ட காணொளி இது:(Vaishnav Jan To | Instrumental Folk | Gandhi | 150 Years | Celebrations |Doordarshan)

காந்திக்குப் பிடித்தமான ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடல் (பாரம்பரிய) இசைக்கருவிகளைக் கொண்டே ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
(இத்தனை பாரம்பரிய இசைக்கருவிகளா என்று அதிசயப்பட்டது உண்மை)

இசைக்கலைஞர்களில் காணக் கிடைக்கும் கலை மீதான பெருமிதம் கலந்த உணர்வுகள் – அமைதி, குதூகலம், ஆழம், கூர்மை, பரவசம்…
இராட்டையில் நூல் நூற்கையில் பெண்மணியின் கவனம் வெளிப்படும் அவரது அமைதியும் கூர்மையும் பதிவு செய்யப்பட்ட விதம் (மூன்றே வினாடிகள் பிண்ணனிகளில் வரும் காந்தியுடன் தொடர்புடைய இடங்கள் எழுப்பும் பெருமிதம்
அக்கலைஞர்களை ஒருசேரப் பார்க்கையில் வரும் ஆச்சரியம்.
ஆறு நிமிடங்களில் மொத்தமாகவே நிச்சயம் பரவசமானதொரு அனுபவம்…

தொடர்புடைய மற்றும் இரண்டு காணொளிகள்:

 

Vaishnava Jan To Full HD |

Yakshagana Artist Performance | Instrumental | Gandhi 150 | DD Chandana

Vaishnav Jan to – song

நன்றி

அன்புடன்
வெங்கட்ரமணன்

முந்தைய கட்டுரைஇரு நோயாளிகள், ஏழாம் கடல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…